ஒரே விவாகரத்தா இருக்கு!. கல்யாணம்னாலே பயம்!.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபீலிங்!...

by சிவா |
aishwarya
X

aishwarya

Aishwarya rajesh: பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தனுஷ் இயக்கிய காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பாராட்டை பெற்றார். இந்த படம் தேசிய விருதையும் பெற்றது.

நல்ல நடிகை என்றாலும் ஐஸ்வர்யாவுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரின் முகத்திற்கு கிராமப்புற கதைகளே செட் ஆகும் என்பதால் அது போன்ற வேடங்கள் மட்டுமே அவரை தேடி வந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, கணவர் பெயர் ரணசிங்கம், இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களில் நடித்தார்.

aishwarya rajesh

அதன்பின் விஜய் சேதுபதி வெவ்வேறு நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கியதால் ஐஸ்வர்யாவுக்கு சரியான வாய்ப்புகள் வரைவில்லை. வட சென்னை படத்தில் சென்னை பாஷையில் கெட்ட வார்த்தையெல்லாம் பேசி அதிர வைத்தார். இப்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆனால், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்தார். இவரின் குடும்பத்தில் சிலர் ஏற்கனவே சினிமாவில் இருந்தவர்கள். விஜய் டிவியில் சில நடன நிகழ்ச்சியில் நடனமாடிதான் கெரியரை துவங்கினார்.

பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள தி கிரேட் இண்டியன் கிச்சன், டிரைவர் ஜமுனா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. தனக்கு ஏற்றமாதிரி வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.

இதையும் படிங்க: அமரன் வெற்றியால் ஆட்டம் போடும் எஸ்கே!.. ஓவர் தலைக்கனமா?.. வெளுத்து வாங்கிய பிரபலம்!..

திருமண உறவு பற்றி பேட்டில் ஒன்றில் பேசிய அவர் ‘வயசு ஆகிட்டே போகுது கல்யாணம் பண்ணிக்கோன்னு என் அம்மா 2 வருஷமா சொல்லிக்கிட்டு இருக்காங்க. கல்யாணம் பண்ணா நல்லா வாழணும்.. நமக்கு விவாகரத்தெல்லாம் செட் ஆகாது. விவாகரத்துக்கு காரணம் இந்த தலைமுறையா இல்ல வேற என்னாவா இருக்கும்னு குழப்பமாக இருக்கு. ஒருத்தர பார்க்கும் போது இவரை காதலிச்சு, கல்யாணம் பண்ணணும்னு தோன்றும். அப்படிப்பட்ட ஒருவரை நான் இன்னும் சந்திக்கவே இல்லை’ என சொல்லி இருக்கிறார்.

தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் என பலரும் மனைவிகளை பிரிந்ததால்தான் ஐஸ்வர்யா இப்படி யோசித்திருக்கிறார் என சொல்ல தேவையில்லை!..

இதையும் படிங்க: பிரபாஸை ஓவர்டேக் செய்த அல்லு அர்ஜுன்!… புஷ்பா 2 எப்படி இருக்கு?.. பயில்வான் என்ன இப்படி சொல்லிட்டாரு!..

Next Story