உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் இவங்க தான்!.. PS -2 வுடன் நேருக்கு நேராக மோதும் பிரபல நடிகை!..
தமிழ் சினிமாவை கடந்தாண்டு மாபெரும் ஆச்சரியத்தில் திகைத்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னம் இயக்க ஏஆர்.ரகுமான் இசையில் படம் மாபெரும் வசூலை அள்ளிக் குவித்தது, வெரும் 500 கோடியில் உருவான படம் முதல் பாகமே 500 கோடியை தாண்டியது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சொல்லப்போனால் இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு லாபம் தான். கல்கியின் புகழ்மிக்க நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அனைவரும் முயற்சி செய்ய அத்திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பின் சிவாஜி, கமல் ஆகியோரும் முயற்சி செய்து ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு வழியாக மணிரத்னம் அந்த சாதனையை படைத்து வெற்றியும் கண்டார். பல நட்சத்திரங்கள் படை சூழ படம் கன்னாபின்னா வெற்றியடைந்தது. தமிழ் சினிமாவிற்கே இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
லைக்கா நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்தது. தமிழ் நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியது. இரண்டாம் பாகத்தையும் ரெட் ஜெயண்ட் வாங்கி தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்த நிலையில் முதல் பாகம் ரிலீஸ் தேதியின் போதே அந்த படத்தோடு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் தனுஷின் ‘ நானே வருவேன்’ படம் ஒன்றாக ஒரே தேதியில் வந்து கலவையான விமர்சனத்தை சந்தித்தது.
இந்த நிலையில் ஏற்கெனவே ரிலீஸுக்காக காத்திருக்கும் படங்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதியால் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து கொண்டு வருகின்றன. ஏனெனில் அந்தப் படத்திற்கான வரவேற்பு எந்த அளவுக்கு இருக்கும் என அனைவருக்கும் தெரியும். அதனால் தெரிந்து கொண்டே காலை வைக்க வேண்டாம் என பல படங்களின் தயாரிப்பாளர்கள் ஒதுங்கி நிற்கின்றனர்.
ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படமான ‘ஃபர்ஹானா’ படம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தோடு நேருக்கு நேர் மோத தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இதுவரைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றன.
இதையும் படிங்க : விஜய் ஆக்ஷன் படங்களில் மட்டும் நடிக்க காரணம் அந்த சம்பவம்தான்!.. இது தெரியாம போச்சே!…
அதோடு இந்த ஃபர்ஹானா படம் சின்ன பட்ஜெட் படம் என்பதால் தங்களுக்கு 150 ஸ்கீரின் கிடைத்தால் கூட போதும் என அதன் தயாரிப்பாளர் ஒரு தீர்க்கமான முடிவில் இருக்கிறாராம். அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் மட்டும் பொன்னியின் செல்வன் படத்தோடு களத்தில் சந்திக்கின்றது.