ப்ளீஸ் 'அந்த' மாதிரி நடிக்காதீங்க..ரசிகரின் கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் நச் பதில்..

by Manikandan |
ப்ளீஸ் அந்த மாதிரி நடிக்காதீங்க..ரசிகரின் கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் நச் பதில்..
X

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 2010 ஆண்டு 'நீதானா அவன்' என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவர் பிரபலமானது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த 'காக்காமுட்டை' திரைப்படம் தான். அப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.

அதன் பின், அவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிய துவங்கியது. அதன்படி, செக்கச்சிவந்த வானம், தர்மதுரை, கனா, வடசென்னை, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர், தனது அசாதாரணமான நடிப்பால் முன்னணி நடிகை கூட நடிக்காத கதாபாத்திரங்களில் கூட நடித்து தற்போது பெயரும் புகழும் பெற்றுள்ளார்.

அந்த வகையில், முன்னணி நடிகர்ளுடன் நடித்து கொண்டு இருக்கும்போதே 'காக்காமுட்டை' படத்தில் அவர் அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வேற எந்த நடிகையாக இருந்தாலும், நிராகரித்து இருப்பார்கள். இவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அசால்ட்டாக நடிப்பதால், இவரது ரசிகர்கள் இவரை பாராட்டியுள்ளனர்.

aishwarya rajesh

சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுவது வழக்கம், அந்தவகையில் ஒரு ரசிகர் நடிப்பதற்கு நிறம் தேவையில்லை என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் என்றார்.

aishwarya rajesh

மேலும், ஒரு ரசிகர் நீங்கள் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிப்பது உங்களுக்கு செட் ஆகவில்லை, இனிமேல் அந்த மாதிரி கதாபாத்திரம் வந்தால் அதை வேண்டாம்னு சொல்லிருங்க என்று அறிவுரை சொன்னார். அதற்கு நடிகை ரசிகர் வேண்டிக்கொள் கேற்ப ஹ்ம்ம் சரி என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்களேன் - சைலன்டா அடுத்தடுத்த சம்பவத்துக்கு தயாராகும் பா.ரஞ்சித்.! மிரளப்போகும் இந்திய சினிமா…

இதற்கிடையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அடுத்த படத்தில் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸுடன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கையில், துருவ நட்சத்திரம் படத்தை தவிர கிரேட் இந்தியன் கிச்சன் ஹிந்தி ரிமேக், டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் உள்ளது.

aishwarya rajesh

aishwarya rajesh

Next Story