நகைகளை திருட வைத்ததே ஐஸ்வர்யாதான்!.. வேலைக்காரி கொடுத்த பகீர் வாக்குமூலம்!..

by சிவா |   ( Updated:2023-03-30 02:45:51  )
easwari
X

easwari

நடிகர் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷ் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யாவின் வீட்டில் நகைகள் திருடு போன சம்பவம் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான அந்த வீட்டில் வேலை செய்து வரும் ஈஸ்வரி என்கிற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடமிருந்து இதுவரை 103 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைரம் மற்றும் கிலோ கணக்கில் வெள்ளிக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவுக்கு ரஜினி கொடுத்தது, தனுஷ் தரப்பில் கொடுத்த நகை என பல கிராம் நகைகள் இருந்ததால் ஐஸ்வர்யாவுக்கே மொத்தம் எத்தனை பவுன் நகைகள் அவரிமிருந்து திருட்டு போனது என்கிற கணக்கு தெரியவில்லை. அதாவது, அவர் காவல்துறையினர் கூறியதை விட அதிக நகைகள் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

aish

aish

மேலும், 95 லட்சம் செலவில் ஒரு புதிய வீட்டையும் ஈஸ்வரி கட்டியுள்ளார். வங்கியில் கடன் வாங்கி அந்த வீட்டை கட்டிய ஈஸ்வரி இரண்டு வருடத்தில் அந்த கடனை அடைத்துள்ளார். அந்த வீட்டு பத்திரத்தையும் காவல் துறையினர் அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஈஸ்வரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் ‘நான் ஐஸ்வர்யாவின் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். அங்கு 18 ஆண்கள் வேலை செய்யும் நிலையில் நான் மட்டுமே பெண். எனவே, ஐஸ்வர்யா என்னிடம் நெருக்கமாக பழகுவார். எனவே, எனக்கு நகைகள் எந்த லாக்கரில் இருக்கிறது? அதற்கான சாவி எங்கே இருக்கிறது என எல்லாமே எனக்கு தெரியும்.

aish

எனக்கு அவர்கள் கொடுத்த சம்பளம் பத்தவில்லை. அதனால் துவக்கத்தில் சின்ன நகைகளை திருடினேன். ஐஸ்வர்யா அதை கண்டுபிடிக்கவில்லை. எனவே, தொடர்ந்து நகைகளை திருடினேன். எனக்கு 30 ஆயிரம் மட்டுமே சம்பளமாக கொடுத்தார். நல்ல சம்பளம் கொடுத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன்?.. நகைகளை என்ன திருட வைத்ததே ஐஸ்வர்யாதான்’ என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளை வைத்து ஈஸ்வரி தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இரண்டாவது மகளுக்கு மளிகை கடையும், தன் கணவருக்கு அதிக முதலீட்டுடன் கூடிய காய்கறி கடையும் வைத்து கொடுத்துள்ளார். சோழிங்க நல்லூரில் வீடு கட்டி வாடைக்கு விட்டுள்ளார். ஈஸ்வரின் இந்த செயலுக்கு ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்யும் கார் ஓட்டுனர் வெங்கடேன் உதவியாக இருந்துள்ளார். அவர்தான் ஈஸ்வரின் திருடும் நகைகளை விற்று கொடுத்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

aish

16 வருடங்களாக வேலை செய்யும் ஈஸ்வரி மற்றும் 10 வருடங்களாக வேலை செய்யும் கார் ஓட்டுனர் வெங்கடேசன் இருவரும் சேர்ந்த எத்தனை வருடங்களாக இதை செய்து வருகிறார்கள்? சந்தேகம் வராமல் எப்படி திருடினார்கள்?, ரஜினி வீட்டிலும் இதுபோல் திருடினார்களா? என பல்வேறு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சைவ சாப்பாட்டை பார்த்துவிட்டு படப்பிடிப்பை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்… ஏன் தெரியுமா?

Next Story