Connect with us

அவர மறக்கவா இப்படி பண்றீங்க…? ஐஸ்வர்யா புகைப்படத்தை பார்த்து ஏடாகுடமாக கேள்வி கேட்கும் ரசிகர்கள்…

aish_main_cine

Cinema News

அவர மறக்கவா இப்படி பண்றீங்க…? ஐஸ்வர்யா புகைப்படத்தை பார்த்து ஏடாகுடமாக கேள்வி கேட்கும் ரசிகர்கள்…

கிட்டத்தட்ட 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து அவரவர் வழியில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த நட்சத்திர தம்பதிகள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கும் இரு மகன்கள் உள்ளனர். தங்களுக்குள் உண்டான மனக்கசப்பால் பிரிவதாக அறிவித்தனர்.

aish1_cine

தனுஷ் படபிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா தனது படத்தின் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரின் இந்த முடிவு திரையுலக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனினும் ரஜினியின் தலையீட்டால் இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தன.

aish2_cine

ஆனால் அப்படி ஒரு சம்பவம் இதுவரைக்கும் நடக்கவில்லை. இதனிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் தன் அன்றாட வாழ்க்கை எந்த மாதிரி இருக்கிறது, எப்படி போகிறது என்று ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வீடியோ, புகைப்படங்களை ஸேர் செய்து வருகிறார்.

aish3_cine

இந்த நிலையில் இன்று ட்விட்ட்ரில் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார். அதில் ”எனது நாள் பெரும்பாலும் விடியற்காலையில் ஒரு சவாரியுடன் தொடங்குகிறது .உடல் உழைப்பு உங்களை ஒரு போதும் தவறு செய்ய விடாது” என்கிற மாதிரியான போஸ்டை தனது புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் சில பேர் “ போதும் போதும்… நீங்க அவர கண்டுக்காம இருக்குறீங்கனு போடுற போஸ்ட் தானே இது” என்று பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top