உதவி இயக்குனருடன் டேட்டிங்!.. அடங்காத ஐஸ்வர்யாவை கண்டித்த ரஜினி.. பயில்வான் பகீர் தகவல்...

by prabhanjani |
dhanush
X

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அவர்களே சமூக வலைதளங்களில் உறுதி செய்திருந்தனர். பிறகு சில நாட்களில் அந்த அறிக்கையை அவர்கள் டெலீட் செய்துவிட்டனர். இது குறித்து முழுமையாக எந்த தகவலும் தெரியாமல் இருந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது.

dhanush

ஆனால் அந்த திருமணம் நடக்காது, ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவை கூப்பிட்டு கடுமையாக திட்டிவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷும், ஐஸ்வர்யாவும், விவாகரத்து செய்துக்கொள்ள மாட்டார்கள். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை தற்காலிகமானது தான். அவர்கள் இப்போது தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், விரைவில் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள்.

விவாகரத்து செய்துகொள்ள மாட்டார்கள். ரஜினிகாந்தும் இதற்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார். சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இளம் உதவி இயக்குநரை விரும்பினார். அந்த நபரை ஐஸ்வர்யா வீட்டிற்கு அழைத்து சென்றார்., ஆனால் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் இந்த வயதில் இதெல்லாம் உனக்கு தேவையா? என்று மிக கடுமையாக திட்டிவிட்டார்.

dhanush

இனி இப்படி செய்யக்கூடாது என்று உறுதியாக கூறிவிட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்துக்கு தனுஷ் மீது நல்ல அபிப்ராயம் தான் இருக்கிறது. எனவே, அவர் இவர்கள் விவாகரத்து செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார். கூடிய சீக்கிரமே, ஓரிரு மாதத்தில் கூட தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டு இணைந்துவிட்டனர் என்ற செய்தி வரும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- திடீரென எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட ஐடியா!.. ஒரே நாளில் உருவான சூப்பர் ஹிட் பாடல்!.. அட அந்த பாட்டா!..

Next Story