அதுமட்டும் நடக்காம போயிருந்தா லால் சலாம் ஹிட் ஆயிருக்கும்!.. புலம்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!..

by சிவா |
aishwarya
X

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்களும் உண்டு. திருமணத்திற்கு பின் தனுஷின் அண்ணன் செல்வராகவிடம் உதவி இயக்குனராக சில படங்களில் வேலை செய்து சினிமா இயக்குவதை கற்றுக்கொண்டார்.

கணவர் தனுஷை வைத்து 3 என்கிற படத்தையும் இயக்கினார். ஆனால், அப்படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடலே இப்படத்தின் வெற்றிக்கு எதிராக முடிந்தது. ஏனெனில், இப்படம் வெளியாவதற்கு முன்பே தனுஷ் - அனிருத் இணைந்து உருவாக்கிய அந்த பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: இயக்குனரை அப்புறம் ஃபிக்ஸ் பண்ணுங்க.. ‘தளபதி 69’ படத்தின் ஹீரோயின் இவங்கதான்பா

எனவே, அந்த பாடலை 3 படத்தில் வைத்தார்கள். எனவே, ரசிகர்களுக்கு 3 ஒரு ஜாலியான படம் என தோன்றியது. ஆனால், படமோ ஒரு சீரியஸான விஷயம் பற்றி பேசியது. எனவே, அப்படம் ரசிகர்களை கவரவில்லை. அடுத்து சில வருடங்கள் கழித்து கவுதம் கார்த்தியை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்த படமும் ஓடவில்லை.

இந்நிலையில்தான், லால் சலாம் என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாவின் அப்பா ரஜினி கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. அதோடு, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: ரெடின் கிங்ஸ்லிக்கு நயன் ஜோடியா? மேடையில் மெர்சலாக்கிய இயக்குனர் நெல்சன்!.. என்னங்க இப்படி?

ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. தமிழ்நாட்டில் மொத்தமே ரூ.15 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிபோன போதே இப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல்போய்விட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ஐஸ்வர்யா ‘21 நாள் ஷூட்டிங் பண்ண ஃபுட்டேஜ் காணாமல் போனது உண்மைதான். 10 கேமரா வச்சி கிரிக்கெட் போட்டியை ஷூட் செய்தோம். அதெல்லாம் மிஸ் ஆயிடுச்சி. அதை மீண்டும் எடுக்கவும் முடியவில்லை. கையில் என்ன இருந்ததை அதை வைத்து எடிட்டிங் செய்தோம். ஒரு காம்ப்ரமைஸோடுதான் படத்தை முடித்தோம். ஹார்ட் டிஸ்க் மட்டும் மிஸ் ஆகலன்னா நாங்க சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லி இருப்போம்’ என அவர் சொல்லியிருந்தார்.

Next Story