’பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்ததே கோவம்...! எழுந்து போய் ஐஸ்வர்யா ராய் செய்த செயலை பாருங்க...
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட காவிய படமாக வரப்போகிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இந்த படத்தின் டீஸ்ர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார்,பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, திரிஷா உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
படத்தின் இசைப்புயல் ஏஆர். ரகுமானின் இசை கூடுதல் சிறப்பு. நேற்று வரை படத்தின் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டது. போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் படத்தில் இன்னொரு கதாபாத்திரமாக நடிக்கும் பொல்லாதவன், வடசென்னை, ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கிஷோர் படத்தின் ஒரு சம்பவத்தை கூறி நெகிழ்ச்சி படுத்தினார். அவர் கூறியதாவது: படத்தில் மாட்டை பழிகொடுக்கும் காட்சி உள்ளதாம். அப்போது ஐஸ்வர்யா ராய் அந்த நேரத்தில் வசனம் பேசப்படுகிற மாதிரி காட்சியாம்.
ஐஸ்வர்யா பேசும் போது மாட்டை கட்டுப்படுத்த சக நடிகர் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தாராம். அப்போது தான் மாடு அமைதியாக இருக்கும் என்று இந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். ஆனால் அவர் தொடர்ந்து சத்தம் எழுப்ப ஐஸ்வர்யாவால் அவருடைய வசனத்தை சரியாக பேச முடியாமல் இருக்க எனக்கு கொஞ்சம் தொந்தரவாக இருக்கிறது . தயவுசெய்து யார் சத்தம் போட்டீங்களோ அமைதியாக இருங்கள் என சொன்னாராம். காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டு முடிந்தவுடன் சத்தம் போட்டவரை கண்டுபிடித்து நேரடியாக வந்து மன்னிப்பும் கேட்டாராம் ஐஸ்வர்யா ராய். என்னால் வசனங்களை பேசமுடியாது அதனால் தான் அமைதியாக இருக்க சொன்னேன் என கூறி மன்னிப்பு கேட்டார் என கிஷோர் தெரிவித்தார்.