Connect with us

Cinema News

ஒரு காருக்குள் பாடாய் படும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான திகிலூட்டும் திரில்லர் வீடியோ..

தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக நடிக்க தெரிந்த நல்ல நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பள்ளிக்கூட பருவ பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் சரி இரண்டு கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை தாண்டி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் தேடிவரும். அப்படித்தான் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் சமீப காலமாக கதைகள் தேடி வருகின்றன.

தற்போது தான் அவர் நடிப்பில் சூழல் எனும் அமேசான் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அவர்  முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் டிரைவர் ஜமுனா எனும் திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்களேன் – வடிவேலுவாக மாறிய யோகி பாபு… அது மட்டும் செஞ்சுறாதீங்க பல வருஷம் காணாமல் போயிடுவீங்க..

இந்த படத்தை வத்திக்குச்சி எனும் படத்தை எடுத்த கின்ஸ்லின் இயக்கியுள்ளார். இந்த படம் பெண் கார் ஓட்டுநரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. ஒரு சவாரி வருகிறது, அதில் நான்கு பேர் வருகிறார்கள், அவர்களை கொல்ல ஒரு கும்பல் காத்திருக்கிறது. இந்த இரண்டு கும்பலுக்கும் நடுவில் டிரைவர் ஜமுனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் மாட்டிக்கொள்கிறார்.

அந்த இரண்டு கும்பல்களிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா என்பதை திகிலூட்டும் விதமாக திரில்லர் வீடியோவாக இந்த ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top