நயன்தாராவும் நீயும் ஒன்னா...உனக்கு ஏம்மா இந்த வேலை...? அடங்காத ஐஸ்வர்யா ராஜேஷ்....

by Manikandan |   ( Updated:2022-02-28 08:31:15  )
நயன்தாராவும் நீயும் ஒன்னா...உனக்கு ஏம்மா இந்த வேலை...? அடங்காத ஐஸ்வர்யா ராஜேஷ்....
X

தற்போது உள்ள கதாநாயகிகள் ஒரு சில படங்களில் நடித்த பின்பு ஃபீல்ட் அவுட் சென்றுவிடுகின்றனர். விரல்விட்டு கூட எண்ண முடியாத சில ஹீரோயின்கள் மட்டுமே 10 வருடங்கள் 15 வருடங்கள் என்று சினிமா துறையில் நிலைத்து நிற்கின்றனர்.

ஸ்ரீதிவ்யா, லட்சுமிமேனன் தொடங்கி ராஷி கண்ணா, கீர்த்தி சுரேஷ் வரையில் பலரும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்து முன்னணி ஹீரோயினாக வருவார்கள் என்று நினைத்து இருக்கும் வேளையில் திடீரென புதுமுக ஹீரோயின்கள் வந்த உடன் பழைய ஹீரோயின் மார்க்கெட்டை காலி செய்துவிடுகிறார்கள்.

ஆனால், இதில் நிலைத்து நின்று நடிகைகளில் முக்கியமானவர் நயன்தாரா. அவர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பார். அதே போல அவ்வப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பார். மாயா, அறம், நானும் ரவுடி தான் போன்ற திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவுக்கு இருக்கும்.

இதையும் படியுங்களேன் - இதெல்லாம் ஒரு வேலையவே செய்றாங்கபா.! தனுஷ் படத்தை வைத்து விளையாடும் OTT நிறுவனம்.!

அதேபோல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்து வந்தாலும், தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனக்கு முன்னுரிமை உள்ள கதாபாத்திரங்களை நடித்து வருகிறார் அப்படி காக்கா முட்டை, கனா, கா/பெ ரணசிங்கம், வடசென்னை, பூமிகா போன்ற திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.

இதன் காரணமாக வரும் காலங்களில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டாராக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பார் என்று திரையுலகில் கூறப்படுகிறது. அவர் முன்னணி ஹீரோயினாக நடித்த கனா சீன மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக வரும் காலங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பது தற்போதே தெரிகிறது.

Next Story