ரஜினி மகள் செய்த காரியத்தால் வாயடைத்து போன ஒட்டுமொத்த சங்கம்! அப்பாவிட கிரேட்டுனு நிருபிச்சிட்டாரு
Aishwarya Rajinikanth: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50வது பொன்விழா ஆண்டை நெருங்க இருக்கும் ரஜினி பல போராட்டங்களை கடந்து வந்தவர். இன்று இந்திய சினிமாவில் வியக்கும் அளவுக்கு ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறார் .
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இவருக்குத்தான் முதலிடம். கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் ரஜினி. இவருடைய ஒவ்வொரு படங்களின் ஓப்பனிங்கும் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது.
இதையும் படிங்க: எழுந்திருக்க முடியாத நிலையிலும் அஜித் செய்த மாபெரும் செயல்! இன்னும் எத்தனைதான் இருக்கு?
என்னதான் சினிமாவில் ஒரு வெற்றியை பெற்ற மனிதராக இருந்தாலும் அவரைப் பற்றி விமர்சனங்கள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன. எந்த ஒரு வெள்ள நிவாரணமாகட்டும் யாருக்காவது உதவியாகட்டும் இவர் கையில் இருந்து ஒரு பைசா கூட வராது என பல பேர் கூறி இருக்கிறார்கள்.
ஆனால் அஜித்தைப் போல இவரும் பப்ளிசிட்டி பண்ணாமல் பல உதவிகளை செய்து வருவதாகவும் செய்திகள் வெளி வருகின்றன. இந்த நிலையில் இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த ஒரு காரியம் இன்று ஒட்டுமொத்த திரைப்பட சங்கத்தையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: இந்த படத்தில் நான் நடிக்கட்டுமா?.. எம்.ஜி.ஆர். கேட்டு வாங்கி நடித்த அந்த திரைப்படம்!…
அதாவது சென்னை திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி செலவுக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆண்டதோறும் 10 லட்சம் நன்கொடையாக அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக 5 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் வி உதயக்குமாரிடம் வழங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதை நான் ஆண்டுதோறும் செய்ய விரும்புகிறேன். அதுவும் என்னுடைய சொந்த காசில் நான் செய்ய ஆசைப்படுகிறேன். இது என்னுடைய பெருமை என்றும் கருதுகிறேன். இயக்குனர் சங்கத்தில் எத்தனையோ உதவி இயக்குனர்களின் பிள்ளைகள் கல்வி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருவது என் காதுக்கு தெரியவந்தது.
இதையும் படிங்க: லோகி-க்கு முன்னாடி நான் முந்திக்கிட்டே… ‘GOAT’ படத்தில் திரிஷா… வெங்கட்பிரபு சொன்ன சுவாரஸ்யம்…!
அதன் பிறகு தான் இப்படி ஒரு யோசனை எனக்கு தோன்றியது. நம்மால் மற்றவர் உதவி பெற்றால் அது அவங்களுக்கும் நல்லது நமக்கும் நல்லது என தோன்றியே இனிமேல் ஆண்டுதோரும் இதற்காக பத்து லட்சம் நன்கொடையாக தர முன் வந்திருக்கிறேன் என நேற்று நடந்த தமிழ்நாடு திரைப்பட சங்க பத்திரிகையாளர் பேட்டியில் பேசி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
வயதில் இளையவரானாலும் இவர் பேசியதைக் கண்டு அருகில் அமர்ந்த ஆர்வி உதயகுமார் ஆர் கே செல்வமணி அனைவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.