Categories: Cinema News latest news tamil cinema gossips

பயில்வானுக்கு வக்காலத்து வாங்கும் சவுண்ட் சரோஜா.!? அவர் வேலைய அவர் பண்றார்….

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்க்ளில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா என கூறுவதை விட இவரை ஆறு திரைப்படத்தில் இவர் நடித்து இருந்த சவுண்ட் சரோஜா எனும் பெயரை சொன்னால் ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும்.

இவரை சமீப காலமாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் அதிகமாக காண முடியவில்லை. இவருக்கு தற்போது போதிய வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லையாம். அதனால் தான் தற்போது சோப் விற்று அதன் மூலம் வரும் வருவாயில் தான் சாப்பிட்டு வருவதாக ஒரு நேர்காணலில் அவரே கூறினார்.

அந்த நேர்காணலில் பல்வேறு சர்ச்சையான கேள்விகளுக்கும் அசராமல் தனது பாணியில் பதிலளித்தார் ஐஸ்வர்யா. அப்போது நிருபர், ‘ பெண்களை தவறாக பேசும் பத்திரிகையாளர் பயில்வான் பற்றி என்ன நினைக்கிறீர்கள். இப்படி பெண்களின் பர்சனல் வாழ்வை பொதுவெளியில் கூறுகிறாரே இது  பற்றி கூறுங்கள் .’ என்பது போல கேட்கவே,

இதையும் படியுங்களேன் – மொத்தமா கதைய மாத்திடீங்களே.! ஆணி வேறே அதுதானே.? ரஜினிக்கு தெரிஞ்சா கோபப்பட போறார்.!?

உடனே ஐஸ்வர்யா , ‘ அது தான் அவர் வேலை அவர் செய்கிறார். அதனை சம்பந்தப்பட்டவர்கள் அது பற்றி பேசுவார்கள். அவர் செய்யும் காரியத்துக்கான பாவ புண்ணியங்களை அவர் அனுபவிப்பார்.’ என்று நடிகை ஐஸ்வர்யா பேசியிருந்தார். இது பயில்வானுக்கு சப்போர்ட் செய்வது போல தெரிந்தாலும், நமக்கு எதுக்கு வம்பு, நாம் எதாவது அவரை பற்றி பேச பதிலுக்கு நம்மை பற்றி ஏதேனும் பேசிவிட்டால் சிக்கலாகி விடும் என அந்த கேள்வியை சமாளித்து விட்டு சென்றார் என்று சிலர் கிசுகிசுக்கின்றனர்.

Published by
Manikandan