அடுத்த பட்ஜெட் அத்தனை கோடி!...தெறித்து ஓடிய தயாரிப்பாளர்...அடங்காத கோப்ரா இயக்குனர்.....

by சிவா |
ajay
X

சில இயக்குனர்கள் தொடர்ந்து 2 ஹிட் படங்களை கொடுத்துவிட்டால் அவர்களை கையில் பிடிக்க முடியாது. தனக்கு தோன்றியதையெல்லாம் படமாக எடுப்பார்கள். இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததாலும், முன்னணி நடிகர் சிபாரிசு செய்துவிட்டதாலும் படத்தின் தயாரிப்பாளரும் பணத்தை பல கோடிகள் செலவு செய்வார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் கதி அவ்வளவுதான்.

ajay

இதை அந்த இயக்குனர்கள் புரிந்துகொள்ளவே மாட்டார்கள். பணம் கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் மற்றும் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமை என இரண்டையுமே புரிந்துகொள்ள மாட்டார்கள். நான் எடுப்பதுதான் படம் என எடுத்து கவுத்து விடுவார்கள். இதற்கு தற்போது மிகப்பெரிய உதாரணமாக மாறியிருப்பவர் அஜய் ஞானமுத்து.

இதையும் படிங்க: மீண்டும் விஜய் – அஜித் மோதிக்கொள்வார்களா…? இல்லை பின்னனியில் இருக்கும் அரசியல் நாடகம் பலிக்குமா..?

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்து விக்ரமை வைத்து கோப்ரா படத்தை துவக்கினார். தன்னை அடுத்த ஷங்கராக நினைத்துக்கொண்ட அஜய் ஞானமுத்து சரியான திட்டமிடல் இல்லாமல் 3 வருடங்கள் இப்படத்தை எடுத்து கூறிய பட்ஜெட்டை விட பல கோடிகளில் படத்தை முடித்தார். இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என செய்திகள் வெளியாகி வருகிறது.

ajay

சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை கவராமல் ரிலீஸ் ஆன அன்றே தியேட்டரில் காத்து வாங்கியது. இதனால், தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு பல கோடிகள் நஷ்டம். தமிழகத்தில் இதுவரை இப்படம் ரூ.17 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.

ஆனாலும் ,மீண்டும் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு அஜய் ஞானமுத்துவை ரெக்கமண்ட் செய்து கதை சொல்ல அனுப்பினாராம் விக்ரம். படத்தின் பட்ஜெட் ரூ.90 கோடி என அஜய் ஞானமுத்து ஆரம்பிக்க, ‘அப்புறம் பேசுவோம் தம்பி..போயிட்டு வாங்க’ என அனுப்பிவிட்டது அந்த தயாரிப்பு நிறுவனம்.

கோப்ரா ரிசல்ட் அவங்களுக்கும் தெரியும் இல்லையா?....

Next Story