..15 வருடத்திற்கு முன் இதே நாளில்..!! சமூக வலைதளத்தில் தெறிக்கவிடும் தல ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் அளவிற்கு தமிழ் சினிமாவில் தோல்விப்படங்களி கொடுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஆரம்ப காலங்களில் பல தோல்விப்படங்களை கொடுத்துள்ளார். இவரேகூட ஒரேமுறை பேட்டியில் இதை கூறியுள்ளார்.
பல தோல்விகளுக்குப்பின் 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹாட்ரி வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார். அந்தவகையில் கடந்த 2006ல் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் வரலாறு.
இப்படம் 2004ஆம் ஆண்டே வெளியாவதாக இருந்தது. ஆனால், பல்வேறு பிரச்சனைகளால் இப்படத்தின் படப்பிடிப்பே நீண்ட நாளுக்கு இழுத்தது. இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அஜித்துக்கு 'ஆனான் கடவுள்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதற்காக உடல் எடையை குறைத்தார். உடல் எடையை திடீரென குறைத்தது வரலாறு படத்தின் படப்பிடிப்பை பாதித்தது. பின்னர் இதில் நாயகியாக நடிக்கவிருந்த ஜோதிகா விளக்கினார், அவருக்குப்பதில் அசின் இதில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.
அப்பா அஜித்துக்கு ஜோடியாக மீனா, சிம்ரன், தேவயானி என பலரிடம் பேசி கடைசியாக கனிகாவை புக் செய்தனர். இவ்வாறாக பல பிரச்சனைகளை கடந்து படம் வெளியாகும்போது 'ஃகாட்பாதர்' என பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் அதை வரலாறு என மாற்றினார்.
ஒருவழியாக அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி 2006 தீபாவளிக்கு வெளியான இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இன்றுடன் இப்படம் வெளியாகி சரியாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, டுவிட்டரில் #15YearsOfMegaBBVaralaru என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். இப்படத்தில் அஜித் பாரத நடன கலைஞராக நடித்திருந்தது அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms