More
Categories: Cinema News latest news

ரிவர்ஸ் கியரில் செல்லும் அஜித்.! இதுதான் இப்போ ட்ரெண்ட்.!

அஜித் தற்போது வலிமை படத்தை தொடர்ந்து, மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். அஜித் – H.வினோத் – போனிகபூர் கூட்டணியில் உருவாகும் 3வது திரைப்படம் இதுவாகும்.

Advertising
Advertising

இந்த திரைப்படம் தான் அஜித்திடம் , வினோத் முதன் முதலாக கூறிய கதையாம். அதற்குள் அஜித் – போனி கபூர் விருப்பப்பட்டு வினோத்திடம் பிங்க் ரிமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்க கோரினர். அதற்கடுத்து அஜித் கூறிய ஒன் லைன் தான் வலிமை படத்தின் கதை என கூறப்படுகிறது.

அஜித் நடித்து வரும் இந்த திரைப்படம் தான் வினோத் முதலில் கூறிய கதையாம். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு இரண்டு விதமான கதாபாத்திரமாம். இரட்டை வேடம் கிடையாது என கூறப்படுகிறது. வயதான கதாபாத்திரம், இளம் கதாபாத்திரம்.

இதையும் படியுங்களேன் – கண்ட நாயெல்லாம் புத்தி சொல்ல தேவையில்லை.! கொந்தளித்த அஜித்.!

 

இதில் முதலில் வயதான கதாபாத்திரம் கொண்ட காட்சிகளை முதலில் இயக்க தான் படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதற்கேற்றாற் போல அஜித் சமீப நாட்களாக வயதான தோற்றத்தில் தான் வெளியில் காணப்படுகிறார். அதிலும் முழுக்க வெள்ளை முடி, நீளமான தாடி, காதில் கடுக்கன் என செம ட்ரெண்ட் லுக்கில் இருக்கிறார் அஜித்.

முதலில் வயாதான தோற்றம், அடுத்து இளமையான தோற்றம் என ரிவர்ஸ் கியரில் தான் இப்படத்தை வினோத் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

Published by
Manikandan

Recent Posts