Categories: latest news

தப்பித்துக்கொண்ட ரசிகர்கள்.! அஜித்தின் அடுத்த பட கதாபாத்திரம் இதுதான்.!

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை தியேட்டர்காரர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். பைக் ரேஸிங், அதன் மூலம் நடக்கும் குற்றங்கள் என படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டது.

அஜித்தின் கடைசி சில படங்களை எடுத்து பார்த்தால் பெரும்பாலும் அஜித் போலீசாக வருவார். இல்லையென்றால் அஜித் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். நேர்கொண்ட பார்வை படம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அது ரீ மேக் திரைப்படம்.

இதையும் படியுங்களேன் – அடிச்சி பிடிச்சி அந்த இடத்தையும் பிடிச்சிட்டார் அஜித்.! இல்லனா தெய்வ குத்தமாகிருக்கும்.!

இதனால், அடுத்தடுத்த அஜித் கதாபாத்திரங்களை படம் பேர் அறிவிக்கும் முன்னரே ரசிகர்கள் கணித்து வந்தனர். ஆனால், தற்போது அடுத்த படத்திற்கு அதிலிருந்து வேறுபட்டு வேறு கதைக்களத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

H வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அடுத்து அஜித் நடிக்க உள்ள அவரது 61வது திரைப்படத்தில் அஜித் சாமானிய மனிதராக நடிக்க உள்ளாராம். மேலும் இதில் அஜித் கதாபாத்திரம் வில்லன் குணம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Published by
Manikandan