Connect with us

எல்லாமே பொய் தான்.! இதுதான் உண்மை.! அஜித்-61வது படத்தின் அடுக்கடுக்கான சுவாரஸ்யங்கள்..,

Cinema News

எல்லாமே பொய் தான்.! இதுதான் உண்மை.! அஜித்-61வது படத்தின் அடுக்கடுக்கான சுவாரஸ்யங்கள்..,

அஜித் நடிப்பில் தற்போது அவரது 61வது திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை அடுத்து  மீண்டும் H.வினோத் – போனி கபூர் உடன் அஜித் இணைந்து படம் செய்து வருகிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் தயாராகிறது. காரணம், இது தான் அஜித்திடம் வினோத் கூறிய முதல் கதை என கூறப்படுகிறது. முதல் படம் நேர்கொண்ட பார்வை ஹிந்தி ரீமேக். இரண்டாம் படமான வலிமை அஜித் கூறிய பைக் பற்றிய ஒன் லைன் கதை என கூறப்படுகிறது.

 

 

அஜித் தற்போது நடித்து வரும் இந்த படம் தான் வினோத் இயக்கும் திரைப்படம் போல இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இல்லை இல்லை அஜித் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். இளம் வயது அஜித்திற்கு இளம் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங், வயது கூடுதலாக இருக்கும் அஜித்துக்கு வேறு ஹீரோயின் என இஷ்டத்துக்கு அடித்து விட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – எனக்கு அதுதான் ஆசை., கமல் அதை நிறைவேற்ற தவறிட்டார்.! – மேடையில் வருத்தப்பட்ட மணிரத்னம்.!

தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக சில உண்மை தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது அஜித்திற்கு 90 சதவீதம் வயதான கெட்டப் தானாம். அதற்கு ஜோடியாக அசுரன் பட புகழ் மஞ்சு வாரியார் நடிக்க உள்ளாராம். இளம் வயது ஹீரோயின் என்று எதுவும் கிடையாதாம். படம் வங்கி கொள்ளை பற்றியதாம். மேலும் தகவல்கள் வலிமை பட அப்டேட் போல இழுத்துக்கொண்டு போகாது.  விரைவில் படக்குழுவால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top