
Cinema News
அஜித் படம் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.! விக்னேஷ் சிவனின் அசால்ட்டான பதில்.! பீதியில் ரசிகர்கள்.!
வலிமை திரைப்படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை அடுத்து அஜித் தனது 62வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனிடம் கொடுத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை அடுத்து தான் தற்போது அஜித் படத்திற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் பட ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்டார்.
இதையும் படியுங்களேன் – சண்டைக்கு வாங்க., தைரியமாக கோதாவில் குதித்த தளபதி விஜய்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
அப்போது அவரிடம் அடுத்த படம் அஜித்துடன் செய்கிறீர்கள் அது பற்றி கூற முடியுமா என கேட்க, அவர் உடனே, ‘ அஜித் சார் ரசிர்களுக்கு என சில விஷயங்கள் சேர்க்க வேண்டும். அதே போல எனது பாணியில் அந்த படம் இருக்க வேண்டும். இதுதான் டாஸ்க். நம்ம தோனி கூறியது போல நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்வோம். வெற்றி தோல்வி நம் கையில் இல்லை.’ என தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த படங்கள் ஓர் மெல்லிய கதைக்களம் கொண்டதாக இருக்கும். அந்த பாணி அஜித்திற்கு செட் ஆகுமா ரசிகர்கள் பீதியில் இருக்கின்றனர். அடுத்தடுத்து அஜித் பாட அப்டேட் வருகிறதா அல்லது அஜித்தின் 61வது திரைப்படம் முடிந்த பிறகு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.