ஸ்டேடியத்தில் ஆலுமா டோலுமா சாங்.. கேலரியில் ஷாலினியின் ரியாக்ஷன்.. திரும்பி பார்த்த ஃபேன்ஸ்

aaluma
ஐபிஎல் போட்டி: நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அதில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை பெங்களூர் அணி வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் தன்னுடைய 17 வருட பகையை பெங்களூர் அணி தீர்த்துக் கொண்டது. பெரும்பாலும் ஐபிஎல் போட்டி நடைபெறும் போதெல்லாம் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ திரை பிரபலங்களுக்கு ஒரே ஜாலியாகத்தான் இருக்கும்.
ஷாலினியின் ரியாக்ஷன்: சென்னையில் நடைபெறும் போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் மைதானத்தில் கூடி விடுவார்கள். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை அனைத்து பிரபலங்களையும் மைதானத்தில் நாம் பார்க்க முடியும். அந்த வகையில் நேற்று நடந்த போட்டியில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையும்மான ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக்குடன் போட்டியை காண வந்திருந்தார்.
ஆலுமா டோலுமா சாங்: ஐபிஎல் போட்டியை பொருத்தவரைக்கும் ஒரு பக்கம் போட்டி நடந்தாலும் இன்னொரு பக்கம் டிஜே போடும் அந்த பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெறும். அதுவும் தல தோனி மைதானத்திற்குள் வரும் பொழுது ரஜினி பாடலில் இருந்து ஹிட்டான பல பாடல்களை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது தான் டிஜேவின் முக்கிய வேலையாக இருக்கும். அந்த வகையில் நேற்று அஜித்தின் வேதாளம் படத்தில் அமைந்த ஆலுமா டோலுமா பாடல் ஒலிக்க அரங்கமே ஆர்ப்பரித்ததை பார்க்க முடிந்தது.

திரும்பி பார்த்த ரசிகர்கள்: அந்தப் பாடல் ஒலிக்கும் போது கேலரியில் இருந்த ஷாலினி தன் மகனை அழைத்து காதில் ஏதோ சொல்லிவிட்டு அவரும் அந்த பாடலுக்கு ஏற்றபடி நடனம் ஆடியதையும் ஒரு ரசிகர் வீடியோ எடுத்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மைதானத்தில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலைக் கேட்டதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஷாலினியின் இந்த ரியாக்ஷனை திரும்பி பார்த்து ரசிப்பதையும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
வேதாளம் படத்தில் அமைந்த அந்த பாடலில் அஜித் ஆடும் அந்த ஸ்டெப் அனைவருக்கும் ஒரு பிடித்தமான ஸ்டெப்பாகவே இன்று வரை இருந்து வருகிறது. ஒரு பக்கம் மைதானத்தில் தல தோனி இன்னொரு பக்கம் டிஜேவின் சவுண்டில் தல அஜித்தின் பாடல் என அரங்கமே அதிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/saravanantraja/status/1905923680997413258