பழச எல்லாம் தூசு தட்டி எடுக்கும் தமிழ் சினிமா!.. ரி ரிலீஸில் ரஜினிக்கு அடுத்த படியாக அஜித்!.. என்ன படம் தெரியுமா?..

by Rohini |
ajith_main_cine
X

ajith

தமிழ் சினிமாவில் சமீபகாலமாகவே ஆரம்பத்தில் ரிலீஸ் செய்த படங்களை திரும்பவும் மறு ரிலீஸ் என்ற முறையில் முற்றிலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சில பல மாற்றங்களை செய்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

ajith1-cine

ajith

இந்த லிஸ்டில் ஏகப்பட்ட எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் பல வெற்றிப் படங்கள் இன்னும் சில திரையரங்குகளில்ஓடிக்கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த படங்களாவது இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற நோக்கத்தில் டிஜிட்டல் முறையில் இப்ப உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி வெளியிடுகின்றனர்.

ஆனால் சமீபத்தில் ரஜினியின் மிகப்பெரிய தோல்வி படமான பாபா படத்தை மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். அதற்கான வேலைகள் தான் இப்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ரஜினியும் அதற்கான டப்பிங் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டார்.

ajith2_cine

rajini

இதையும் படிங்க : கை கொடுத்த விஜய்.. கால வாறிவிட்ட அஜித்.. ‘தீ..தளபதி’ பாடலை சிம்பு தெறிக்க விட பின்னனியில் இருக்கும் காரணம் இதோ!…

மேலும் பாபா படத்தில் அரசியல் வசனங்கள் எல்லாம் பேசியிருப்பார் ரஜினி. ஆனால் இப்பொழுது ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முடிவெடுத்திருந்த நேரத்தில் அது சம்பந்தமான வசனங்கள் எல்லாம் கட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு அடுத்த படியாக இப்போது நடிகர் அஜித்தும் இணைந்திருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் படத்தையும் மறுஒளிபரப்பு செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான ஆழ்வார் படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது. இப்பொழுது ஆழ்வார் படத்தை தான் ரி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

ajith3_Cine

ajith

Next Story