Connect with us

Cinema News

அந்த நடிகை சூப்பர் பிகருங்க!… ஷூட்டிங்கில் அஜித் சொன்ன விஷயம்!.. இவர மட்டும் விட்டாங்க…

Ajithkumar: சமீபத்திய காலமாக பெரிய நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவையே இல்லாமல் விடும் டயலாக்குகள் பெரிய சர்ச்சையாகி வருகிறது. அந்த லிஸ்ட்டில் விஜய், ரஜினியை தொடர்ந்து தற்போது அஜித்தும் இணைந்து இருக்கிறார்.

அஜித்தா அவர் ரொம்ப அமைதியாக இருப்பாரே. பெருசா யாருக்கிட்டையும் பேச மாட்டாரே. ஒதுங்கியே இருப்பார் என்று தான் பலரிடமும் ஒரு கருத்து இருக்கு. ஆனா தற்போது அந்த கருத்துக்கு வேட்டு வைப்பது போல தான் ஒரு விஷயம் நடந்து இருக்கிறது. இதை கேட்ட அஜித் ரசிகர்கள் கூட கொஞ்சம் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..

திருப்பதி என்ற படத்தில் அஜித் நடித்த போது அவருடன் இணைந்து நடித்தவர் நடிகர் பெஞ்சமின். அவர் மட்டுமல்லாமல் கஞ்சா கருப்பு, சத்யன், கருணாநிதி என அஜித்துக்கு அந்த படத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். அவர்களுடன் ஷூட்டிங்கில் ரொம்பவே கலகலப்பாக அஜித் பேசிக்கொண்டு வருவாராம்.

அப்படி ஒருமுறை பெஞ்சமின் அருகில் உட்கார்ந்து இருக்க அவரை திடீரென அழைத்து அஜித், அங்க பாருங்க சூப்பர் பிகருனு சொல்ல இவரும் திரும்பி பார்த்தாராம். அது அப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை சதா என்பதால் கொஞ்சம் ஜர்க்கானவர்.

என்ன சார் ஹீரோயினை போய் என பெஞ்சமின் கொஞ்சம் ஷாக் ஆகி கேட்க ஏன் அவங்களும் பிகர் தானே என்றாராம் அஜித். இதே மாதிரி ஷாமிடம், ஜோதிகா, சிம்ரன் குறித்து விஜய் பேசியது வைரலானது. அதுமட்டுமல்லாமல் தன்னை ரஜினிகாந்த் பின்னாடி தட்டினர் என ரம்பா எதார்த்தமாக சொல்ல அந்த விஷயம் புயலாக இணையத்தில் பரவியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

Continue Reading

More in Cinema News

To Top