நான் சொன்னா கேட்கமாட்டார்!. ஆனா அவர் சொன்னா கேட்பார்!.. புலம்பிய அஜித் அப்பா...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு சுதந்திரம் என மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பவர் நடிகர் அஜித். அவரை மாதிரியே தனது குடும்பத்தையும் மிகவும் அக்கறையுடனும் பார்த்து வருபவர். ஒரு பெரிய நடிகரின் மகன், மகள், அப்பா, அம்மா என்று எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக இருக்க வைத்தவர்.
இந்த கொள்கை அஜித்திற்கு அவரது அப்பா மூலம் வந்தவை. இதை பழைய பேட்டிகளில் அஜித்தே பல முறை கூறியிருக்கிறார். பத்திரிக்கையாளரை சந்திப்பது, பொது இடங்களில் ரசிகர்களை சந்திப்பது என எதையும் விரும்பாதவர். ஒரு நடிகன் என்கிற முறையில் தன்னுடைய வேலைய செய்கிறேன் என்று தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவர் நடிகர் அஜித்.
இந்த நிலையில் அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி திரையுலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மகன் என்ற முறையில் அப்பாவிற்கான இறுதிச்சடங்கை மிகச்சிறப்பாக செய்து முடித்தார் அஜித். இப்படி பட்ட சூழ்நிலையில் அஜித்திற்கு அவரது அப்பாவிற்குமான நெருக்கம் பற்றி பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன் அஜித்தின் அப்பாவை பற்றி சில செய்திகளை கூறினார். 5 வருடங்களுக்கு முன்பு திருவான்மியூரில் இருந்த அஜித்தின் அப்பா மற்றும் அவரது அம்மா தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார்களாம். அப்போது பயில்வான் ரெங்கநாதனும் அவர்கள் வீட்டருகே தான் தங்கியிருந்தாராம்.
இவரும் நடைபயிற்சிக்கு போவாராம். அப்போது தான் அஜித்தின் அப்பாவிற்கும் பயில்வான் ரெங்கநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். அந்தப் பழக்கத்தில் ஏராளமான விஷயங்களை அஜித்தின் அப்பா பயில்வானிடம் பகிர்ந்திருக்கிறாராம். அதாவது அஜித் முதலில்அவரது அப்பா பேச்சை கேட்கமாட்டார் என்பது தான்.
இதைக் கேட்டதும் பயில்வான் ரெங்கநாதனுக்கு ஆச்சரியமாகிவிட்டதாம். அஜித் அவரது மேலாளரான சுரேஷ் சந்திராவின் பேச்சைத்தான் கேட்பாராம். அவர் என்ன சொன்னாலும் கேட்பாராம். அதற்கு காரணம் சினிமாவிற்கும் அஜித்தின் அப்பாவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதால் சினிமா பற்றிய விஷயங்களில் அஜித்தின் தந்தை தலையிட மாட்டாராம்.
இதையும் படிங்க : சூர்யா இல்லன்னா பத்து தல படம் கிடையாது.. – அப்படி சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
படத்தின் கதை பற்றிய விவாதத்திலும் தலையிட மாட்டாராம். எல்லாம் சுரேஷ் சந்திராவை வைத்து தான் அஜித் எல்லாவற்றையும் மேற்கொள்வாராம். இன்னும் பல விஷயங்களை பகிர்ந்தாராம். ஆனால் அதை எல்லாவற்றையும்
சொல்ல முடியாது என பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.