thinivu
வலிமை படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை தொடர்புடையது ஆகும். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார்.
பக்கா ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வலிமை திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்படத்தை எப்படியும் ஹிட் ஆக்கிவிட வேண்டும் என அஜித்தும், வினோத்தும் வேலை செய்துள்ளனர்.
இப்படம் உருவான கதை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள வினோத் ‘இப்படத்தின் முழுக்கதையையும் அஜித்திடம் நான் கூறவில்லை. ஒரே ஒரு காட்சியை மட்டுமே கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போக இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அவருக்கு மிகவும் பிடித்த அந்த காட்சியை படத்தில் வைக்க முடியவில்லை’ என வினோத் கூறியுள்ளார்.
துணிவு திரைப்படம் விஜயின் ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…