அஜித்:
தற்போது அஜித் மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று அவருடைய அணி ஏழாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. தொடர்ந்து போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதுமட்டுமில்லாமல் அவருடைய சீருடையில் பல கம்பெனிகளின் லோகோ-க்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. அதனால் இரண்டு விளம்பர படங்களிலும் நடிக்க இருக்கிறார் அஜித்.
அந்த இரண்டு விளம்பர படங்களையும் சிறுத்தை சிவாதான் இயக்குகிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்தை மீண்டும் சிறுத்தை சிவாதான் இயக்குவார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தை இயக்குகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் அஜித்தின் வாழ்க்கையை டாக்குமென்ட்ரியாகவும் எடுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்.
டாக்குமென்ட்ரி:
அந்த டாக்குமென்ட்ரியை இயக்குனர் ஏஎல்.விஜய்தான் படமாக்க இருக்கிறார். இந்த ஐடியா திடீரென வந்தது கிடையாது. ஒரு சமயம் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சில வீடியோக்களை வெளியிட்டு பேசியிருந்தார். அப்போதிலிருந்தே அவரை ஃபாலோ செய்து வருகிறார்களாம். அவ்வப்போது அந்த வீடியோக்களையும் எடிட் செய்து பாதுகாத்து வருகிறார்களாம்.
அப்போ இது ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பிருக்கிறதா என்றால் அதை பற்றி தெரியவில்லை என்றும் ஆனால் அஜித் இதை கவனமாக கையாண்டு வருகிறார் என்றும் மிகவும் பாதுகாத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சரி அஜித் ஆதிக் படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைவாரா என்ற ஒரு கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் அஜித்துக்கு இருக்கும் நீண்ட கால கடன் விஷ்ணு வர்தன்.
அந்தப் படமா?
அவருக்கு ஒரு படம் பண்ணனும்னு நினைத்துக் கொண்டே இருக்கிறார். ஏற்கனவே இதை பற்றி செய்திகள் வெளியானது. அஜித்தை ராஜராஜ சோழனாக காட்டப் போகிறார் விஷ்ணு வர்தன். இது ஒரு வரலாற்று படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது இல்லை. F1 மாதிரியான படத்தில் நடிக்க அஜித் ஆர்வம் காட்டி வருகிறாராம். அதனால் அதற்கேற்ப ஸ்கிரிப்ட் தயார் செய்யுமாறு விஷ்ணுவர்தனிடம் அஜித் கூறியிருக்கிறாராம்.
