More
Categories: Cinema News latest news

மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஆஸ்த்தான இயக்குனர்? அப்போ வெற்றிமாறன்

Actor Ajith: இப்போது சமூக வலைதளங்களில் அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் பற்றிய செய்திகள் தீயாய் பரவி வருகின்றது. சில பல காரணங்களால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருக்க நெட்டிசன்கள் அஜித்தை பற்றி பல ட்ரோல்களை உருவாக்கி கிண்டலடித்து வந்தனர்.

ஒரு வழியாக விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக நேற்றுதான் அஜித் துபாய் சென்றார். எப்படியும் ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவதாக படக்குழு தெரிவித்திருக்கின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: நிக்‌ஷனை பார்த்து சரியான கேள்வி கேட்ட கமல்! ஆடிப் போன ஹவுஸ் மேட்ஸ் – ஆண்டவரே எதிர்பார்க்கவே இல்ல

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பதாக செய்திகள் கூறுகின்றது. இதற்கிடையில் துணிவு படத்தை முடித்ததில் இருந்து எச்.வினோத் படங்கள் பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

கமலுடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்த நிலையில் எச்.வினோத் ப்ராஜக்ட்டை கமல் தள்ளிப்போடுவதாகவே தெரிகிறதாம். அதனால் வினோத் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். ஏற்கனவே தனுஷுடனும் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் கில்லாடி இளையராஜாதான்… அவரை அடிச்சிக்க ஆளே இல்லை..!

ஆனால் தனுஷ் இருக்கும் பிஸியில் இப்போது அந்த வாய்ப்பு நடக்காது என்றே தெரியாது. அதனால் இந்த கேப்பில் மீண்டும் அஜித்தை வைத்தே ஒரு படம் பண்ணிவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் வினோத். இதைப் பற்றி அஜித்திடம் பேசும்  முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம்.

ஆனால் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் அஜித் வினோத்துடன் எப்படி இணைவார் என்றே தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் உலக பைக் பயணம் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: 100 படத்தில் வடிவேலுவுடன் நடிக்க வந்த வாய்ப்பு! முடியவே முடியாது என மறுத்த நடிகை – காரணம் இதுதானா?

Published by
Rohini

Recent Posts