Connect with us

அஜித்தின் கேரியரையே திருப்பிப்போட்ட இயக்குனர்… மீண்டும் வந்த அரிய வாய்ப்பு… “AK 63”யா இருக்குமோ!!

AK63

Cinema News

அஜித்தின் கேரியரையே திருப்பிப்போட்ட இயக்குனர்… மீண்டும் வந்த அரிய வாய்ப்பு… “AK 63”யா இருக்குமோ!!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படம் வருகிற பொங்கல்  தினத்தன்று வெளியாக உள்ளது. “நேர்கொண்ட பார்வை”,”வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்குமார், ஹெச்.வினோத்துடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் இது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தது.

Thunivu

Thunivu

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. கடந்த 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதுவதால் ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.

அஜித்குமார் “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார். தனது 62 ஆவது திரைப்படத்திற்குப் பிறகு அஜித், ஒன்றரை வருடங்கள் நடிப்புக்கு இடைவெளி விடப்போவதாகவும், அந்த ஒன்றரை வருடங்கள் உலகம் முழுக்க பைக்கில் பயணிக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளிவருகிறது.

Ajith Kumar

Ajith Kumar

இந்த நிலையில் அஜித்குமார் நடிக்கும் 63 ஆவது திரைப்படம் குறித்த ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் தனது 63 ஆவது திரைப்படத்தில் அஜித்குமார் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கல்யாண செய்தி சொன்ன ரெண்டாவது நாளில் மரண செய்தி… “சில்க் ஸ்மிதா இப்படி பண்ணிட்டாளே”…  பதறியடித்து ஓடிய டான்ஸ் மாஸ்டர்…

Vishnuvardhan

Vishnuvardhan

விஷ்ணுவர்தன் இதற்கு முன் அஜித்தை வைத்து “பில்லா”, “ஆரம்பம்” போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் “அறிந்தும் அறியாமலும்”, “பட்டியல்”, “சர்வம்”, “யட்சன்” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித்குமாருடன் விஷ்ணுவர்தன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Billa

Billa

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த “பில்லா” திரைப்படம் அஜித்தின் கேரியரிலேயே முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படமாகும். அஜித் இத்திரைப்படத்தில் மிகவும் ஸ்டைலாக நடித்திருந்தார். அஜித்குமாரை மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் காட்சிப்படுத்தியது ரசிகர்களை உற்சாகத்தில் அழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top