அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி...! ஏகே 61 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்...?
எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்திற்கு பிறகு ஏகே 61 படத்தில் மீண்டும் இணைகிறார் அஜித். இந்த படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. படத்தின் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் சமுத்திரக்கனியும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதால் விடுமுறையை கழிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் அஜித். லண்டனில் இருந்து திரும்பியவுடன் மீதமுள்ள காட்சிகளை எடுக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி ரிலீஸாக இந்த படம் வெளியாகும் என நினைத்திருந்த நிலையில் அதில் மாற்றங்கள் நிகழுவதாக தெரிகிறது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கார்த்தியின் சர்தார், ஜெயம் ரவியின் இறைவன் போன்ற படங்கள் தீபாவளியை லாக் செய்துள்ளனர். ஆனால் அஜித்தின் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் இன்னும் புரோமோஷன் வேலைகள் எல்லாம் இருக்க
படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படலாம் என அறிந்தே மற்ற பட தயாரிப்பாளர்கள் துணிந்தே தீபாவளியை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டிசம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. எப்பொழுது ரிலீஸானாலும் அது அஜித் ரசிகர்களுக்கு பண்டிகை நாளாகவே கொண்டாடுவர் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவரைக்கும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.