
Cinema News
காத்திருப்புக்கு கிடைத்த பலன்!.. இரட்டிப்பு சந்தோஷத்தில் அஜித்.. ஜெட் வேகத்தில் பறக்கப் போகும் ஏகே – 62!..
வாரிசு, துணிவு ஆகிய இரு படங்கள் எப்படி ஒன்றாக படப்பிடிப்புகளை துவங்கி ஒரே நேரத்தில் திரையில் மோதியதோ அதே எதிர்பார்ப்பை விஜய் , அஜித் ஆகிய இருவரும் அவர்களின் அடுத்தப் படத்திலும் கொடுப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இடையில் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் ஏகே- 62 படம் கிடப்பில் போடப்பட்டது. அதே நேரம் அந்தப் பக்கம் லோகேஷ் காஷ்மீர் வரை சென்று முக்கால் வாசி படப்பிடிப்பை முடித்து விட்டார். ஆனாலும் இன்னும் அஜித்தின் அடுத்தப் படத்திற்கான எந்த அப்டேட்களும் இல்லாமல் இருந்தன.

ajith1
படத்தை எடுக்கப் போகும் இயக்குனர் யார் என்பதையே இன்னும் முடிவு பண்ணாத நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டிருந்தன. மகிழ் திருமேனி தான் ஏகே 62 படத்தை எடுக்கப் போகிறார் என்ற தகவல் வந்தாலும் அவருக்கும் கதையை ரெடி செய்து தரும்படி லைக்கா நிறுவனம் கெடு விதித்திருந்தது.
ஒரு வழியாக மகிழ் திருமேனி ஒன்றுக்கு இரண்டாக இரண்டு கதைகளை தயார் செய்து வந்து கொடுத்திருக்கிறாராம். அதில் ஒன்று குடும்ப பாங்கான ஆக்ஷன் கதையாம், மற்றொன்று ஸ்பை திரில்லரை மையமாக வைத்து உருவாகும் கதையாம்.

ajith2
இரண்டு கதைகளும் அஜித்திற்கு பிடித்து போக அடுத்தக் கட்ட வேலைகளில் இறங்கியிருக்கின்றனர் படக்குழு. கூடிய சீக்கிரம் அதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : அந்த ஒரு சீனை எடுக்கமுடியாமல் தவித்த இயக்குனர்!.. ஆத்திரத்தில் சீதாவை பளார் அறைவிட்ட பிரபல நடிகர்?..