AK62வில் இவரா.?! விஜய்க்கு வெறித்தனமா பயிற்சி கொடுத்தவர் இப்போ அஜித்துக்கா.?!

வலிமை திரைப்படத்தை அடுத்து அஜித்குமார் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்படத்தையும்போனி கபூர் தான் தயாரிக்கிறார்.
61வது திரைப்பட ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே, அஜித்தின் 62வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டுள்ளது.
அதுவும் இந்த முறை அஜித் தனது பாணியில் இருந்து மாறி விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்துள்ளார். அதுவே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதனை தவிர வேறு அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், அதற்குள் இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொரு நடிகர் தான் இந்த படத்தில் நடிப்பதாக தனது இணையதள பக்கத்தில் அறிவித்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு குத்துச்சண்டை பயிற்சி அளிக்கும் கராத்தே ஹுசைன் அவர்தான்.
இதையும் படியுங்களேன் - கே.ஜி.எஃப்-ஆல் பீஸ்ட்டுக்கு வந்த பிரச்சனை..! அதிர்ந்து போன சன் பிக்ச்சர்ஸ்.!
அண்மைக்காலமாக யூடியூபில் அதிரடியான சமையல் நிகழ்ச்சிகளை செய்து இணையவாசிகள் மத்தியில் புகழ் பெற்று வருகிறார். இவர் தற்போது AK61 திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் எப்படி படம் உருவாக போகிறதோ என ரசிகர்கள் தற்போதே எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.