அஜித் படப்பிடிப்பை நிறுத்திய போலீஸ்.? கேமிரா பறிமுதல்.?! பின்னணியில் நடந்தது என்ன.?!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது நடித்த வரும் திரைப்படம் "AK61". இது அஜித்தின் 61-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக "AK61" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கபட்டு வருகிறது.
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், நடிகர் அஜித் துப்பாக்கி சூடுதல் போட்டிக்காக தமிழ்நாடு வந்தார். இதனையடுத்து, எப்போதுதான் AK61படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் காத்துள்ள நிலையில் சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வந்தது.
இதையும் படியுங்களேன்- எனக்கு அந்த மாதிரி கதைகளில் நடிக்க ஆசையாக இருக்கிறது.. தீரன் நாயகியின் வித்தியாசமான ஆசை.!
அது என்னவென்றால் அஜித்தின் 61-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பை அனுமதியின்றி நடத்தியதாக காவல்துறையினர் படப்பிடிப்பை நிறுத்தியதாகவும், நிறுத்திவிட்டு அங்கிருந்த கேமராக்களையும் பறிமுதல் செய்ததாகவும் இதனால் தான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் ஒன்று பரவி வந்தது.

vinoth
ஆனால் இது முற்றிலும் வதந்தியாக செய்தி தானம் ஏனென்றால், கடந்த மாதமே AK61 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இயக்குனர் வினோத் பட லொக்கேஷனுக்காக வெளியூர் சென்று விட்டார். எனவே இன்னும் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. இது முற்றிலுமாக வதந்தி தகவல் என படக்குழு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.