போட்றா வெடிய.! இதுதான் ஆதாரம்.! இனிதான் கச்சேரி ஆரம்பம்.! AK62 தாறுமாறு அப்டேட் இதோ...

by Manikandan |   ( Updated:2022-03-18 14:17:03  )
போட்றா வெடிய.! இதுதான் ஆதாரம்.! இனிதான் கச்சேரி ஆரம்பம்.! AK62 தாறுமாறு அப்டேட் இதோ...
X

அஜித் தற்போது தனது பழைய பாணியை மாற்றி ரசிகர்களுக்குகாக புத்துணர்ச்சியோடு களமிறங்க தயாராகிவிட்டார். பொதுவாக அஜித், தான் நடித்துக்கொண்டிருக்கும் படம் முடியும் வரையில் அடுத்த பட வேலையில் இறங்கமாட்டார். அந்த படம் முடிந்த பின்னர் தான் கதையே கூட முடிவு செய்வார் .

ஆனால், தற்போது அவர் அதில் மாற்றம் கொண்டுவந்துள்ளார் அவரது 60வது திரைப்படமாக வலிமை ரிலீஸ் ஆன பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடிப்பார் என அறிவிப்பு வெளியானது. அதன் ஷூட்டிங் கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை.

அதற்குள் அஜித்தின் 62வது படம் பற்றிய செய்தி இணையத்தில் கசிய தொடங்கியது. லைகா தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையில் அஜித் நடிக்க உள்ளார் என்கிற செய்தி காட்டு தீயாய் பரவியது.

இதையும் படியுங்களேன் - வயசானாலும் உங்க அலும்பல் தாங்கல.! ஐஸ்வர்யா ராயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! காரணம் இதுதானா.?!

இது உண்மையாக இருந்தாலும் தற்போது அறிவிப்பு வராது, எப்படியும் 61வது ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு தான் வெளிவரும் என நினைத்திருந்தனர். ஆனால், அனைவர்க்கும் ஆச்சர்யமூட்டும் வகையில், அஜித்தின் 62வது பட அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

விக்னேஷ் சிவன் காதல், காமெடி படங்களை ரெம்ப கூலாக எடுப்பவர், அஜித் அண்மைகாலமாக கரடுமுரடான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அஜித்தை எப்படி விக்னேஷ் சிவன் காட்ட போகிறார் என்ற எண்ணங்கள் தற்போதே ரசிகர்கள் மனதில் தொற்றி கொண்டது.

Next Story