Connect with us
ajith_main_cine

Cinema News

பட்டையை கிளப்பிய அஜித்தின் ‘அமர்க்களம்’ இவர் போட்ட விதைதானாம்…! மனுஷன் வாய் முகூர்த்தம் எப்படி இருக்கு பாருங்க…

சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஒரு ஆக்‌ஷன் படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் அமர்க்களம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருப்பார். மேலும் ரகுவரன், நாசர், ராதிகா, வினு சக்கரவர்த்தி உட்பட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ajith1_cine

இந்த படம் அஜித்திற்கு 25வது படம் ஆகும். இந்த படத்தின் மூலம் ஒரு சில சிறப்பம்சங்கள் நடந்தேறியன. ஒன்று அஜித்தின் 25வது படம், மற்றொன்று இவர்களின் திருமணம் இந்த படத்திற்கு அப்புறம் தான் நடைபெற்றது. மேலும் ஏற்கெனவே இந்த படத்திற்கு முன் சரண் அஜித்தை வைத்து காதல் மன்னன் என்ற படத்தை எடுத்தார்.

ajith2_ ine

அந்த படத்தில் நடிக்கும் போதே அஜித் “என் அடுத்த படத்தையும் நீங்கள் தான் இயக்க வேண்டும்” என கூறினாராம். அதன் மூலம் தான் இந்த அமர்க்களம் படத்தின் மூலம் இந்த கூட்டணி உருவானது. மேலும் எந்த மாதிரியான தலைப்பை வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது டூயட் படத்தின் அஞ்சலி பாடலை பாடி முடித்து விட்டு எஸ்.பி.பி. நேராக வந்து ஏ.ஆர்.ரகுமானிடம் சார் பாடல் அமர்க்களம் என்று சொன்னாராம்.

ajith3_cine

அதை கேட்டுதான் அஜித்தின் படத்திற்கு “அமர்க்களம்” என்ற தலைப்பை வைத்தாராம் இயக்குனர் சரண். படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்றார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top