சும்மா அல்லு தெறிக்க விட்டாரு...! அஜித் பைக்கில் எற மறுத்த அந்த நடிகர்...!

by Rohini |   ( Updated:2022-06-10 14:06:51  )
ajith_main_cine
X

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித். வான்மதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஆசை என்ற படத்திற்கு பிறகு தான் இப்படி பட்ட ஒரு நடிகர் இருக்கிறார் என்று நிரூபித்தார். அந்த படத்தில் நடித்து பெரிய அளவிலான வரவேற்பை பெற்றார்.

ajith1_cine

தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை சந்தித்த அஜித் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக தீனா படத்தின் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கார் ரேஸ், பைக் ரேஸ் என தன் கவனத்தை ரேஸிலும் செலுத்தி வந்தார். நடித்துக் கொண்டிருக்கும் போதே நிறைய போட்டிகளில் பங்கு பெற்றார்.

ajith2_cine

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா. இந்தப் படத்தில் முழு நெகடிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்திற்காக அஜித் ஒரு காட்சியில் பைக் ஓட்டுவது போன்று சீன் இருக்கும்.

ajith3_cine

பைக் சீன் இருந்தால் முதலில் அஜித் அந்த பைக்கை ஓட்டி பார்ப்பாராம். அதே வகையில் தான் மங்காத்தா படத்திற்காகவும் பைக்கை ஓட்டி பார்த்தாராம். சுமார் 160 கிமீ வேகத்தில் பறந்திருக்கிறார். வெங்கட் பிரபுவையும் பின்னாடி உட்கார வைத்தும் ஓட்டினாராம். பயந்து கொண்டே தான் இருந்தாராம் வெங்கட் பிரபு. அடுத்து பிரேம்ஜியை அழைத்தாராம் அஜித். ஆனால் அவர் ஓட்டுவதை பார்த்து மிரண்டு போய் விட்டாராம் பிரேம்ஜி. பயந்து உட்காரவில்லையாம்.

Next Story