தன்னை ஏமாற்றியவரையும் ஏத்திவிட்ட AK.. அந்த மனசுதான் சார் கடவுள்....
அஜித்குமாரின் ஆரம்ப காலகட்டத்தில் அவரது மேனேஜராக இருந்தவர் நிக் ஆர்ட்ஸ் பட நிறுவனர் சக்கரவர்த்தி. இவர்தான் அஜித்தின் கால்ஷீட் மற்றும் சம்பள விவரங்களை கவனிப்பவர். அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
அஜித்தின் ஆரம்ப கால திரைப்படங்களான ராசி, வாலி, முதல் கடைசியாக இருவரது கூட்டணியில் வெளியான வரலாறு திரைப்படம் வரை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். மேலும், அவரது மற்ற படங்களின் கால்ஷீட்டையும் கவனித்து வந்துள்ளாராம்.
அதன்பிறகு பல்வேறு காரணங்களால் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மற்றும் அஜித்குமார் இருவரும் பிரிந்துவிட்டனர். அதற்கு காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதாவது, நிக் ஆர்ட்ஸ் சார்பில் அஜித் நடித்துள்ள பல திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்கள் எனவும், அதற்கு லாபம் வரவில்லை எனவும், மேலும் அந்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடித்த திரைப்படங்களுக்கு அஜித்திற்கு முறையான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்வும் கூறப்பட்டு வந்தது.
இதையும் படியுங்களேன் - ரஜினியும் கமலும் பிரிந்தது இந்த படத்தில்தான்!… அதுக்கப்புறம் எல்லாமே ஹிட்டு!…
அதன் காரணமாக இறுதியில் பிரச்சனை முற்றிப்போய், சரி கடைசியாக ஒரு திரைப்படம் நான் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்கிறேன். அதன்பிறகு இருவரும் பிரிந்து விடுவோம் என பேசி கடைசியாக நடித்த திரைப்படம் தான் வரலாறு என கூறப்படுகிறது. அதன் பிறகு இருவரும் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றவில்லை.
தன்னை வைத்து படம் எடுத்து சரியாக சம்பளம் கொடுக்காமல், நஷ்டக்கணக்கு காண்பித்து இருந்தாலும் தனது திரைப்படங்கள் நஷ்டம் என கூறி வந்தாலும், கடைசியாக ஒரு படம் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்கிறேன் என்று அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை இதுவரை எந்த தமிழ் நடிகரும் கூறியதாக தெரியவில்லை. அதனால் தான் அஜித் நல்ல மனிதராக திரையுலகில் வலம் வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.