அஜித் படத்தை தொடர்ந்து ரஜினி படத்திற்கும் வந்த சிக்கல்! ஆனா தலைவர் ரூட்டே வேற
இப்போது கோடம்பாக்கத்தில் உலா வரும் பேச்சு அஜித்தின் விடாமுயற்சி படத்தை பற்றித்தான். படம் என்னவோ இன்னும் கிணற்றில் போட்ட தவளையாகவே கிடக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. முதலில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கியது. அதன் பின் ஸ்கிரிப்ட்டில் ஏற்பட்ட குளறுபடி என விடாமல் துரத்திக் கொண்டுதான் வருகின்றன.
பிப்ரவரியில் ஆரம்பிக்க வேண்டிய இந்தப் படத்தின் தலைப்பையே இப்போதுதான் வெளியிட்டார்கள். மேலும் மே இறுதி, ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என கூறிய நிலையில் படத்தை தயாரிக்க இருந்த லைக்கா நிறுவனத்தில் திடீர் ரெய்டால் ஒட்டுமொத்த படக்குழுவும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அஜித் லைக்கா நிறுவனத்திற்கு ஆறுதலாகவே இருந்து வந்தார்.
ஆனால் திடீரென குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை எடுக்க வில்லை என்றால் வேறொரு கம்பெனிக்கு தயாரிக்கும் பொறுப்பை அறிவித்து விடும் நிலையில் அஜித் இருப்பதாக கூறப்படுகிறது. அது ஒரு வேளை சத்யஜோதி பிலிம்ஸாக கூட இருக்கலாம் என தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க இதே நிலைமைதான் இப்போது ரஜினி படத்திற்கும்.
ரஜினியின் 170 வது படத்தை ஜெய்பீம் இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்குவதாக கூறப்பட்டது. அந்தப் படத்தையும் லைக்கா தான் தயாரிக்க இருந்தது. ஆனால் லைக்காவிற்கு ஏற்கெனவே பிரச்சினை இருப்பதால் ரஜினியின் படமும் டிராப் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் ரஜினி அஜித் கூறியதை போல வேறொரு கம்பெனிக்கு படத்தை பண்ணலாம் என்று சொல்லவில்லையாம். லைக்கா நிறுவனம் எப்போது வருகிறதோ அதுவரை காத்திருப்பதாக கூறியிருக்கிறாராம். ஏனெனில் இயல்பாகவே லைக்கா சுபாஸ்கரன் மீது ரஜினிக்கு ஒரு பெரிய மரியாதையே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பல மேடைகளில் சுபாஸ்கரனை பற்றி பெருமையாகவும் பேசியிருக்கிறார். அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தலைவரின் ஸ்டைலே வேற லெவல் என விஷயம் தெரிந்த சிலர் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க :விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விவேக்!.. அந்த படத்துல அவர் மட்டும் இல்லன்னா!..