கமல் படத்திற்கு உதவிய அஜித் – ஷாலினி!.. பல வருடங்கள் கழித்து சீக்ரெட் சொன்ன இயக்குனர்…

Published on: April 13, 2024
kamal
---Advertisement---

சினிமாவில் ஒரு இயக்குனரோ, நடிகரோ வெற்றி பெறுவது என்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்ல. ஒரு கதையை உருவாக்கி, நடிகர்களின் பின்னால் அலைந்து, ஒரு தயாரிப்பாளரை பிடித்து, சிக்கல் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்து, சிக்கல் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் அப்படம் வெற்றியடைய வேண்டும்.

அது நடப்பதற்குள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இயக்குனரின் நம்பிக்கையை குழைக்க பலரும் காத்திருப்பார்கள். இந்த படம் ஓடாது என அவரின் காதுபடவே பேசுவார்கள். ஏனெனில், சினிமா என்பது போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த உலகம். எப்போது யார் காலை வாறிவிடுவார்கள் என்பதே தெரியாது.

இதையும் படிங்க: நன்றி கெட்ட ரஞ்சித்!.. ஏத்தி விட்டதுக்கு ரஜினிகாந்தை நல்லா செஞ்சிட்டாரு!.. கொதிக்கும் ரசிகர்கள்!..

பாலச்சந்தரின் சிஷ்யர்களில் ஒருவர் சரண். காதல் மன்னன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர். இந்த படம் மட்டுமல்ல. அஜித்தை வைத்து அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்களையும் இயக்கினார். விக்ரமை வைத்து ஜெமினி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர்.

கமல்ஹாசனை வைத்து சரண் இயக்கிய திரைப்படம்தான் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஹிந்தியில் வெளிவந்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் இது. வசூல் செய்து கொடுக்கும் ரவுடி ஒருவர் மருத்துவராக ஆசைப்பட்டு செய்யும் அடாவடிதான் படத்தின் கதை.

இதையும் படிங்க: விடாமுயற்சியை விட்டுத்தள்ளுங்க.. குட் பேட் அக்லி சூப்பர் அப்டேட் தெரியுமா?.. பாலிவுட்டே இறங்குது!..

இப்படத்தில் சினேகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த படம் இது. ஒரு மனிதனின் உடல் மற்றும் மனநோயை நீக்க சக மனிதன் காட்டும் அன்பே போதும் என்பது இப்படத்தின் அடிநாதம்.

இப்படத்தின் எல்லா வேலையும் முடிந்த பின் படம் எப்படி இருக்கிறது என கருத்து கேட்பதற்காக அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் படத்தை போட்டு காட்டி இருக்கிறார் சரண். படத்தை பார்க்கும்போதே பல காட்சிகளிலும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் அஜித். ஷாலினியும் ஃபுல் என்ஜாய் செய்திருக்கிறார். படம் முடிந்தபின் படம் சூப்பராக இருக்கிறது என இவரும் சொல்ல சரணுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. அவர்கள் சொன்னது போலவே இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பட் ஹிட் அடித்தது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.