முன்னணி டைரக்டரையே டைரக்ட் செய்த ஷாலினி... அதுவும் நடுராத்திரியிலா... எதுக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஷாலினி தனது காதலுக்காக நடுராத்திரியில் டைரக்டர் ஒருவரை அலைய விட்டு இருக்கிறார். ஆனால் எதுக்கு என்பது தான் இதில் சுவாரஸ்யமான சேதியே.
தல அஜித்தின் மனைவி ஷாலினி. இவரும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அமர்க்களம் படம் நடிக்கும் போது ஷாலினி மற்றும் அஜித் இடையில் காதல் உருவாகிய என்பது பலருக்கும் தெரியும். ஆனால் எப்படி காதலை சொன்னார் அஜித். அஜித்துக்கு காதல் பரிசு கொடுத்த ஷாலினி என சில ஆச்சரிய தகவல்களும் நடந்து இருக்கிறதாம்.
முதன்முறையாக ஒரு காட்சி படப்பிடிப்பில் இருக்கும் போது அஜித், இயக்குனர் சரண் மற்றும் ஷாலினி ஒன்றாக உட்கார்ந்து இருந்துள்ளனர். அப்போது நடுவில் உட்கார்ந்து இருந்த சரணிடம், அஜித் சீக்கிரம் படத்தினை முடித்துவிடுங்கள் எனக் கூறி இருக்கிறார். சரணும் ஓகே எனக்கூற, எதுக்கு சொல்றேனா இந்த பொண்ண லவ் பண்ணிடுவேணோனு பயமா இருக்கு எனக் கூறி ஷாலினியிடம் ப்ரோபோஸ் செய்தாராம். இதில் ஷாலினி முதலில் அதிர்ச்சியாகி விட்டாராம்.
தொடர்ந்து, இருவருமே ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கிவிட்டனர். அஜித்திற்கு அப்போது பிறந்தநாள் வந்ததாம். அவருக்கு பரிசு கொடுக்க நினைத்த ஷாலினி, டைரக்டர் சரணிடம் உதவி கேட்டாராம். அவரும் சரி எனக் கூறிவிட என் நண்பர் மோகன் என ஒருவர் இருப்பார் அவரிடம் சொல்லி இருக்கிறேன். பேசி விடுங்கள் என அவருக்கு கூறி விடுகிறார்.
சரண் அவர் நண்பரை அழைத்து பேசிவிட்டு இருவரும் நள்ளிரவு 11 மணிக்கு சந்திக்கின்றனர். அப்போது அவர் நண்பர் கார் டிக்கியை திறந்து காட்ட அது முழுவதுமே கிப்ட்களால் நிரம்பி இருந்ததாம். ஷாலினி கால் செய்து எனக்கு எல்லாதையுமே லைவில் கேட்க வேண்டும். காலை கட் செய்யாதீர்கள் எனக் கூறிவிட்டார்.
உடனே சரியாக 12 மணிக்கு அஜித் வீட்டுக்கு சென்ற சரண் மற்றும் நண்பர் மோகனும் அவருக்கு வாழ்த்தை தெரிவித்து கிப்ட்களை கொடுக்க அஜித்திற்கு ஆச்சரியமாகி விட்டதாம். தொடர்ந்து, காலில் பேசத்துவங்கிய இருவரும் சங்கீத சுவரங்கள் என்ற ரீதியில் 4 மணிக்கு தான் தன் மொபைலை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தாராம். இப்படி அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் அறியாத காதல் தகவல்களை ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் சரண்.