டப்பிங் ஆர்ட்டிஸ்ட் காதில் காதலை சொன்ன அஜித்... ஆனா திருமணம் செய்து கொண்டார்... சீக்ரெட் பகிர்ந்த பிரபலம்...
நடிகர் அஜித் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவரின் காதலில் சென்று காதல் குறித்து சொன்னதாக சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனான அஜித் தற்போது துணிவு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகையாக இருந்த ஷாலினி கல்யாணத்துக்கு பின்னர் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினி. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தே பிரபலமானவர். காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழிலும், அதன் ஒரிஜினல் படமான மலையாளத்தில் வெளிவந்த அனியாத்திபிரவு படத்தின் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்.
இதையும் படிங்க: தளபதி – 67லும் தொடரும் கட்டா குஸ்தி!.. விடாமல் துரத்தும் அஜித்!.
ஷாலினியின் சில படங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய நடிகைக்கான அந்தஸ்த்து கிடைத்தது. அவருக்கு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதிலிருந்தே பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவி தான் குரல் கொடுத்து வந்தார். அமர்க்களம் படத்தில் ஷாலினிக்கு குரல் கொடுத்ததும் அவர் தான்.
இந்த படத்திற்கான டப்பிங் வேலைகள் முடிந்த நிலையில், ஸ்ரீஜா அருகில் ஒரு குரல் கேட்டதாம். என் மனைவிக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி என்பது தான். யாரென திரும்பி பார்த்தவருக்கு அதிர்ச்சியாக இருந்ததாம். அங்கு அஜித் நின்று கொண்டிருந்தார். அவரிடம் யார் சார் உங்க மனைவி? புரியலையே எனக் கேட்டு இருக்கிறார்.
நானும், ஷாலினியும் காதலித்து வருகிறோம். விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக காதில் கிசுகிசுத்தாராம். தான் ஆச்சரியமாகி விட்டதாக ஸ்ரீஜா ரவி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.