விஜய்க்கு அடுத்து அஜித்!. ஃபேமிலியே செம க்ளோஸ் ஆயிட்டாங்க!. போட்டோ செம வைரல்!..

by சிவா |   ( Updated:2025-04-25 21:05:33  )
ajith sk
X

தனக்கு பிடித்ததை மட்டும் செய்து வாழும் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடாது. சிலருக்கு அது அமையும். சிலர் அதை அமைத்துகொள்வார்கள். இதில் இரண்டாம் ரகம் அஜித். தனக்கு பிடித்த எல்லாவற்றையும் அவர் செய்து பார்க்கிறார். அதற்கு காரணம் அவருக்கு அமைந்த அன்பான மனைவி ஷாலினி என்றே சொல்ல வேண்டும்.

சினிமாவில் நடித்து கொண்டிருந்தாலும் அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உண்டு. திருமணத்திற்கு பின்பு அஜித்தை பைக் மற்றும் கார் ரேஸில் கலந்துகொள்ள ஷாலினி அனுமதிக்கவில்லை. காரணம் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்கிற பயம். ஏனெனில், ஏற்கனவே அஜித் பலமுறை விபத்துக்களில் சிக்கி 20 முறைக்கு மேல் உடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

பைக், கார் ரேஸ் மட்டுமில்லை. ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்வது, பைக்கில் உலகை சுற்றுவது என அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு. தோன்றும்போது இது அனைத்தையும் அவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். இப்போது கூட ஐரோப்பாவில் நடைபெற்று கொண்டிருக்கும் கார் ரேஸில் அவரின் டீம் கலந்து கொண்டிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் அவரை அவருக்கு போட்டிகள் இருக்கிறது.

ajith

இந்நிலையில்தான், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியை காண அஜித், அவரின் மனைவி ஷாலினி ஆகியோர் வந்தனர். அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனும் அவரின் மனைவியை அழைத்து வந்திருந்தார். முதலில் அஜித் மனைவி ஷாலினியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. அதன்பின் அஜித் மற்றும் எஸ்.கே இருவரின் குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சி.எஸ்.கே டீம் விளையாடுவதை கண்டு ரசித்தார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோட் படத்தின் இறுதியில் சி.எஸ்.கே டீசர்ட் அணிந்துகொண்டு விஜயிடம் துப்பாக்கி வாங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது சேப்பாக் மைதானத்தில் அஜித்துடன் ஜாலியாக மேட்ச் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறார்.

Next Story