ரணகளத்துக்கு நடுவே அஜித்-விஜய் இணைந்து நடித்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்த படக்குழு… அடடா!!
விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படமும் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளிவர உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளன.
இவ்வாறு “வாரிசு”, “துணிவு” ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் மோதவுள்ள செய்தி பரவ தொடங்கியதில் இருந்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றியது போல் “வாரிசு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, “தமிழகத்தில் விஜய்தான் நம்பர் ஒன்” என்று கூறியதாக ஒரு செய்தி பரவியது.
இந்த செய்தியை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மிகவும் உஷ்ணமானார்கள். அஜித்-விஜய் ஆகிய இருவரில் யார் நம்பர் ஒன் என்ற மோதல் இணையத்தில் தொடங்கியது.
சமீபத்தில் “துணிவு” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமானார்கள். மேலும் “வாரிசு” திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒருத்தருக்கொருத்தர் இப்படி முட்டிக்கிட்டா என்னதான் பண்றது?? எம்.ஜி.ஆர். படத்தில் பிரபலங்களுக்குள் நடந்த களேபரங்கள்…
இவ்வாறு இந்த ரணகளத்திற்கு இடையே அஜித்-விஜய் ஆகியோர் நண்பர்களாக இணைந்து நடித்த திரைப்படம் மறுபடியும் வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஆம்!
1995 ஆம் ஆண்டு அஜித், விஜய் ஆகியோர் நண்பர்களாக நடித்த திரைப்படம் “ராஜாவின் பார்வையிலே”. தற்போது “துணிவு”, “வாரிசு” திரைப்படங்கள் மோதவுள்ள நிலையில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி “ராஜாவின் பார்வையிலே” திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.