விஜய்க்கும் அஜித்திற்கும் இடையே ஏற்படும் கைகலப்பு!.. விஜய் பண்ணிட்டாரு..அஜித் பண்ணாம இருப்பாரா?..
இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு மகா யுத்தமாக மாறிக் கொண்டிருப்பது அஜித் விஜய் படங்களுக்கு இடையே ஏற்படும் ரிலீஸ் பிரச்சினை தான். இந்த அளவு போட்டி கடந்த 20 வருடங்களாக எந்த நடிகர்களுக்கும் இல்லை. ஏன் சிவாஜி , எம்ஜிஆருக்கும் இடையே நடந்திருக்குமா என்றால் கண்டிப்பாக இருந்திருக்காது.
அப்படியே நடந்திருந்தாலும் அது கௌரவமான போட்டியாக இருந்திருக்குமே தவிர கடும் போட்டியாக இருந்திருக்காது. ஆனால் இவர்களுக்குள் இருக்கும் போட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. துணிவு மற்றும் வாரிசு படங்களின் அன்றாட செய்திகள் அவர்கள் இருவர் காதிலேயும் கண்டிப்பாக விழுந்திருக்கும்.
இதையும் படிங்க : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது லத்தியா? கனெக்ட்டா?
ஆனால் அதை பற்றி விஜய் , அஜித் இருவருமே வாய் திறக்காமல் இருப்பது தான் சற்று வேதனையளிக்கிறது. அவர்களின் ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதல் இப்பவே இப்படி என்றால் பட ரிலீஸ் சமயத்தில் என்ன ஆகுமோ என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்களை பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரை பற்றி பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி ஒரு ஒப்பீட்டை கூறியுள்ளார். அவர்கள் இருவரின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்பதையும் அதனால் ஏற்படும் தாக்கத்தை பற்றியும் விளக்கி கூறியுள்ளார். ஏற்கெனவே அரசியலில் தன் வருகையை பற்றி விஜய் தேர்தல் மூலம் தெரிவித்து விட்டார்.
விஜயே வந்ததுக்கு பிறகு தல வராமல் இருப்பாரா? கண்டிப்பாக வருவார் என்றும் அதனால் பெரிய கைகலப்பே ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார். ஏற்கெனவே இயக்குனர் பிரவீன் காந்தி ஜோசியமும் பார்ப்பாராம். இவர் பல பிரபலங்களின் ஜாதகத்தை புட்டு புட்டாக வைத்து அது உண்மையாகவும் சில நேரங்களில் உண்மையாகவும் நடந்திருக்கிறது.
மேலும் அவர் கூறியதாவது: ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் ஆரம்பகாலங்களில் பார்த்தால் எம்ஜிஆர்-சிவாஜி சம காலத்து போட்டி நடிகர்களாக இருந்தாலும் எம்ஜிஆரின் இமேஜ் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிவாஜியை விட எம்ஜிஆருக்கு அதிக ரசிகர்கள் இருந்தார்கள்.
இதையும் படிங்க : இப்படி ஒரு காரணத்தைச் சொல்லியா ஒதுக்குவது??… விஜயகாந்த்திற்கு பறிப்போன சினிமா வாய்ப்பின் பின்னணி இதுதான்…
அதே போல ரஜினி கமல் காலத்தில் கமலை விட ரஜினிக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய் அஜித் எடுத்துக் கொண்டால் சமமான ரசிகர் பலத்துடன் நீயா நானா என்ற விகிதத்தில் தான் இருக்கிறார்கள். அதனால் தான் இருவரும் அரசியலுக்குள் வந்தால் மற்ற அரசியல் கட்சிகளே மிரண்டு போகிற அளவுக்கு பெரிய பலத்துடன் இருப்பார்கள் என்று பிரவீன் காந்தி கூறினார்.