நாங்க பேசிக்க மாட்டோமா? வெங்கட் பிரபுவை ஒரே மாதிரி கலாய்த்த அஜித் விஜய்

by Rohini |
ajith
X

ajith

Ajith Vijay:

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என ஒரு பெரிய உச்ச நட்சத்திரங்களாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றனர். இருவருமே சமகாலத்தில் இந்த சினிமாவில் உள் நுழைந்தவர்கள்தான். ஆனால் விஜய் குழந்தை நட்சத்திரமாக அவரின் அப்பா இயக்கத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார் விஜய். அஜித் வான்மதி படத்தின் மூலம் அறிமுகமானார். இருவருமே ஆரம்பகாலங்களில் சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள். இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தில் இருந்துதான் இருவருக்குமான நட்பு ஆரம்பமானது.

இதையும் படிங்க: கோட் கிளைமேக்ஸில் தோனியும், விஜயும் ஒரு செம சீன்!.. ஆனா நடக்காம போச்சே!…

அதோடு விஜயின் குடும்பத்துடனும் அஜித்துக்கு பழக்கம் ஏற்பட அது இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொழில்முனையில் இருவருக்கும் போட்டி இருந்தாலும் அதை நிஜ வாழ்க்கையில் என்றைக்குமே இருவருமே பார்த்தது இல்லை.

இந்த நிலையில் கோட் படத்தின் மூலம் அஜித்தும் விஜயும் எப்படிப்பட்ட நட்பாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதாவது ஒரு வளர்ந்த நடிகர் என்றால் அவரின் படங்களில் மற்ற நடிகரின் ரெஃபர்ன்ஸை வைக்கவே சம்மதிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று கோலிவுட்டில் பெரிய ஆளுமைகளாக இவர்கள் இருந்தாலும் கோட் படத்தில் அஜித்துக்கு உண்டான முக்கியத்துவத்தை விஜய் கொடுக்க சம்மதித்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…

அதுவே பெரிய விஷயம். மேலும் கோட் படத்தின் டிரெய்லரை அஜித் பார்த்து வெங்கட் பிரபுவுக்கு மெசேஜ் அனுப்பினாராம்.அந்த மெசேஜை வெங்கட் பிரபு விஜய்க்கு அனுப்பினாராம். அஜித் மெசேஜை பார்த்து பதிலுக்கு விஜய் வெங்கட் பிரபுவுக்கு மெசேஜ் அனுப்பினாராம்.

விஜய் அனுப்பிய மெசேஜை அஜித்துக்கு அனுப்பினாராம் வெங்கட் பிரபு. இதை அறிந்த விஜயும் அஜித்தும் ‘ஏண்டா எங்ககிட்டத்தான் நம்பர் இருக்கே? நாங்க பேசிக்க மாட்டோமா’ என கலாய்த்தார்களாம். இதை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்.கே, ஜீவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா? நல்லா இருக்கே!

Next Story