Connect with us

அஜித்தும் விஜய்யும் ரகசியமாக சந்தித்துக் கொள்கிறார்களா?!!

Cinema News

அஜித்தும் விஜய்யும் ரகசியமாக சந்தித்துக் கொள்கிறார்களா?!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் அஜித்தும் விஜய் ரகசியமாகச் சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

1990களின் இறுதிக்குப் பிறகு ரஜினி – கமல் லெகஸிக்குப் பிறகு விஜய் – அஜித் காம்போ புதிதாக உருவெடுத்தது. ரஜினியும் கமலும் இண்டஸ்ட்ரியில் இன்றுவரை ஆக்டிவ்வாக இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் அஜித்தும் விஜய்யும் தங்களுக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி ஒரு சக்ஸஸ்ஃபுல்லான ஹீரோக்களாக உருவெடுத்தனர். ஆரம்ப காலகட்டங்களில் பத்திரிகையாளர்களுடன் இருவருமே நல்ல உறவு பாராட்டினர். குறிப்பாக அஜித், தன்னுடைய அலுவலகத்தே பத்திரிகையாளர்களை வரவழைத்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

குமுதத்தில் பணியாற்றிய சந்துரு என்கிற பத்திரிகையாளர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு நேரடியாகப் போய் அஜித் அஞ்சலி செலுத்தியதோடு, மற்ற பத்திரிகையாளர்களுக்கு முன்னாலே போய் அவரது வீட்டில் காத்திருந்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. அதேபோல், விஜய்யும் அவ்வப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது படங்கள் தொடங்கி அரசியல் வரை விவாதிப்பதுண்டு. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் இருவருமே பத்திரிகையாளர்கள், மீடியாவில் இருந்து ஒதுங்கத் தொடங்கினர். அஜித் முற்றிலுமாக மீடியாக்களுக்குப் பேட்டி கொடுப்பதைத் தவிர்த்துவிட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய், சமீபத்தில் பீஸ்ட் ரிலீஸுக்கு முன்பாக ஒரு இண்டர்வியூ கொடுத்திருந்தார். அந்த பேட்டியையுமே பீஸ்ட் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் எடுத்திருந்தார்.


அஜித்தும் சரி விஜய்யும் சரி முன்னர், தங்கள் படங்களில் வரும் பாட்டு, டயலாக்குகளில் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இதை இருவருமே நிறுத்திக் கொண்டனர். இன்றும் இருவரது ரசிகர்களுமே சோசியல் மீடியாக்களில் கடுமையாகக் களமாடிக் கொண்டிருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருகிறார்கள் என்பதுதான் கள நிலவரம். விஜய்யின் மனைவி சங்கீதாவும் அஜித்தின் மனைவி ஷாலினியும் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்கள்.

ஒருவர் வீட்டில் நடக்கும் நல்ல காரியங்கள், விசேஷங்களுக்கு சென்று வருவதை வழக்காம வைத்திருக்கிறார்கள். இல்லத்தரசிகள் இப்படி இருக்கும்போது, அஜித் – விஜய் எப்படி பேசாமல் இருப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தற்போதைய சூழலில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் பெயரிடப்படாத படம் ஆகிய இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. அதனால், இருவரும் அங்கு சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாகப்பட்டினம் என்றில்லாமல், சென்னையில் கூட இவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கலாம். அதுபற்றி தகவல்கள் வெளியே வராதபடி ரகசியமாக வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top