Categories: Cinema History Cinema News latest news

விஜயகாந்தும் அஜித்தும் இணைந்து ஒரு செம படம்… அட நடக்காம போச்சே!…

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த். ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ் சினிமா ஆசையில் விஜயகாந்தாக மாறினார். வாய்ப்பு கேட்டு அலைந்து ஒரு வழியாக வாய்ப்பை பெற்று நடிக்க துவங்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

vijayakanth

இவரைப்போல்தான் நடிகர் அஜித்தும். இவருக்கும் எந்த சினிமா பின்புலமும் இல்லை. ஆனால், வாய்ப்பு தேடி தேடி அலைந்து சினிமாவில் நுழைந்தார். பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்த அஜித், பில்லா படத்திற்கு பின் பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். அதன்பின் மங்காத்தா படத்தின் வெற்றி அஜித்தின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்துள்ளது. தற்போது விஜய்க்கு இணையான மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார்.

இவரும் விஜயகாந்தும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருந்த கதை பலருக்கும் தெரியது. விஜயகாந்த் ஆக்டிவாக நடித்துக்கொண்டிருந்த போது இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு பெரிய சினிமா நிறுவனம் இதை முன்னெடுத்தது. அப்போது, திரைப்படக்கல்லூரியில் படித்த சிலரை வைத்து, ஒரு அருமையான கதையை தேர்ந்தெடுத்து, அதை பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனராம். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அது மட்டும் நடந்திருந்தால், அஜித்தும், விஜயகாந்தும் இணைந்து ஒரு படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: அதிக சம்பளம் கேட்டு ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்.. விக்ரமுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்…

Published by
சிவா