புளூசட்ட மாறனுக்கு அஜித்தின் பதில் இதுதான்!... அட நம்ம தல எப்பவும் கூல்தான்!...
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த மாதம் 24ம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின் அப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என விமர்சகர்கள் பலரும் தெரிவித்தனர். அஜித் ரசிகர்களுக்கு பிடித்ததே ஒழிய பொதுவான சினிமா ரசிகர்களை இப்படம் கவரவில்லை எனக்கூறப்பட்டது.
அதோடு, விமர்சனம் என்கிற பெயரில் புதிய படங்களை கிழித்து தொங்கவிடும் தமிழ் டாக்கீஸ் புளூசட்டமாறன் இப்படத்தில் அஜித்தின் உருவத்தையும் கிண்டலடித்தார். பார்ப்பதற்கு அஜித் பஜன்லால் சேட் போல இருப்பதாகவும், முகத்தில் தொப்பை விழுந்துள்ளதாகவும் அவர் நக்கலடித்தார். இதற்கு நடிகர் மற்றும் ஆர்.கே.சுரேஷ் மற்றும் நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளருமான ஆரியும் ஒரு விழாவில் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், இதற்கு அஜித்தின் பதில் இதுதான் என்பது போல அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித் ஏற்கனவே, 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்துள்ளார். அதில் ‘ரசிகர்கள், என்னை வெறுப்பவர்கள், நடுநிலையாக இருப்பவர்கள் ஆகிய மூவருமே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.. வாழு வாழவிடு..’ என அதில் இருக்கிறது.
இதுதான் புளூசட்டமாறனுக்கு அஜித்தின் பதில் என்பது போல சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.