பெண்ணே சுற்றும் பேரழகனாக அஜித்!.. விமான நிலையத்தில் பெண்களிடம் சிக்கி திக்குமுக்காடிய தல..வைரலாகும் வீடியோ..

by Rohini |   ( Updated:2023-03-11 18:34:41  )
ajith
X

ajith

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் துணிவு படம் வெளியாகி ரசிகர்களிடையே ஒரு மாஸை கிரியேட் செய்தது. மேலும் அஜித்தின் மார்கெட்டையும் சற்று உயர்த்தியது. இதனை அடுத்து தன் அடுத்தப் படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித்.

இதற்கிடையில் தனது பைக் பயணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அஜித் அடுத்ததாக உலக அளவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறார். அந்தப் பயணம் ஏகே 62 படம் டேக் ஆஃப் ஆனதும் ஆரம்பிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ajith1

ajith1

அஜித்திற்கு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை உள்ளடக்கியவர்.அவர் இது நாள் வரை ரசிகர்களை சந்திக்கவில்லை என்றாலும் அவர்களை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தன் ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

அவரை காண வேண்டும் என்றால் விமான நிலையத்தில் போய் காத்துக் கிடந்தால் போதும். அப்போது தான் அஜித்தை காண முடியும் என்ற அளவிற்கு வந்துவிட்டது. விமான நிலையத்தில் அஜித் இருக்கிற மாதிரியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

ajith2

ajith2

அந்த வகையில் நேற்று விமான நிலையத்தில் அஜித் வர அதைப் பார்த்த பெண்கள் அவரை முற்றுகையிட்டு விட்டனர். பெண்கள் கூட்டத்தில் சிக்கி அஜித் ஒரு நிமிஷம் திணறி விட்டார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ :https://www.instagram.com/reel/CppO1ofNPYG/?utm_source=ig_web_copy_link

Courtesy to Daily Thandhi

Next Story