தொடரும் வில்லன் கதாபாத்திரம்...? ஏகே-62ல் களமிறங்குவாரா மக்கள் செல்வன்...! அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி...
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது ஏகே-61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னையிலும் ஐதராபாத்திலும் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வசூல் சாதனை பெற்றது.
இந்த படம் முடிந்ததும் அஜித் விக்னேஷ் சிவனுடம் இணைய உள்ளார். ஏகே-62 என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அப்டேட்ஸ் பற்றி இதுவரை விக்னேஷ் சிவன் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் இந்த படத்தை பற்றி நடிகர் விஜய் சேதுபதியிடம் ரசிகர்கள் கேட்டனர்.
ஏற்கெனவே விஜய் சேதுபதி தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கெத்து காட்டி வருகிறார். அதே வகையில் கிடைத்த படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் விக்னேஷ் சிவனும் இவரும் நெருங்கிய நண்பர்கள். விக்னேஷ் சிவனுடன் இரண்டு படங்களில் நடித்த விஜய் சேதுபதியிடம்
அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் படத்தில் உங்களை வில்லனாக எதிர்பார்க்கலாமா என்று கேட்க , நானே விக்கியிடம் கேட்டேன். அப்படி எதும் நினைத்து வைத்திருக்கிறாயா? என்று. ஆனால் விக்னேஷ் சிவன் நான் எப்பவுமே உங்கள ஹீரோவாகத்தான் பார்ப்பேன் என்று கூறியதாக விஜய் சேதுபதி தெரிவித்தார்.