Categories: Cinema News latest news

‘முகவரி’ படத்துல என்னை அஜித் வேண்டானு சொன்னாரு! கடைசில நடந்ததே வேற

தமிழ் சினிமாவில் அஜித்தின் மாஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் அவர்களுக்காக ஏங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கின்றன. ரசிகர்களிடம் கலந்துரையாடுவது இல்லை. நேரில் வந்து சந்திப்பதும் இல்லை. பொது விழாக்களிலும் கலந்து கொள்வதும் இல்லை. இப்படி இருக்கும் அஜித்தின் மேல் இவ்வளவு பைத்தியமாக இருக்கும் ரசிகர்களுக்கான காரணத்தை இன்னும் கோடம்பாக்கம் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

ajith

அஜித் நடிப்பில் பல நல்ல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் இப்பவும் அந்த படத்தை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படமாக அமைவது முகவரி திரைப்படம். எதார்த்தமான நடிப்பு ஹேண்ட்ஸம் ஆன லுக் என அஜித் அந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்தார்.

Also Read

அந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். 2000 ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தை துரை இயக்க எஸ் எஸ் சக்கரவர்த்தி படத்தை தயாரித்தார். ஒளிப்பதிவு பிசி ஸ்ரீ ராம். படத்திற்கு இசை தேவா. பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகின.

ajith1

இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்கிய துரை மீது ஆரம்பத்தில் அஜித்திற்கு நம்பிக்கையே இல்லையாம். எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யாதவர்.அதனால் கொஞ்சம் அஜித் யோசித்தாராம். ஆனால் துரை மீது எஸ் எஸ் சக்கரவர்த்திக்கு அதிக நம்பிக்கை இருந்ததாம்.

அதனால் சக்கரவர்த்தி அஜித்திடம்” துரை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்லபடியாக படத்தை எடுப்பார்” என்று சொன்னதும் அஜித் அதன் பிறகு சம்மதித்தாராம். இதற்கெல்லாம் காரணம் அந்த நம்பிக்கை தான் .அதாவது என்மேல் சக்கரவர்த்தி நம்பிக்கை வைத்திருந்தார். சக்கரவர்த்தி மீது அலாதி நம்பிக்கை வைத்தவர் அஜித். நான் கடவுளை நம்பினேன் .இந்த மூன்றும் சேர்ந்து தான் அந்தப் படத்தை ஒரு வெற்றி படமாக்கியது என துரை ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : கார்த்திக்கு அவசர அவசரமாக நடந்த திருமணம்..! பிரபல நடிகைதான் அதுக்கு காரணமாம்…

vz durai
Published by
Rohini