கிழிச்சு தொங்கவிட்டாலும் தல தலதான்.. ஷாலினி போட்ட பதிவால் டிரெண்டிங்காகும் அஜித்

by Rohini |   ( Updated:2024-02-20 08:54:48  )
shalini
X

shalini

Actor Ajith: கோலிவுட்டில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபகாலமாக அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. யாரையும் கண்டுகொள்வதில்லை. யார் எப்படி போனால் நமக்கு என்ன என்ற எண்ணம் படைத்தவர் அஜித் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

அதுவும் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அஜித்திற்கு போதாத காலம் என்றே சொல்லலாம். எப்பேற்பட்ட மனுஷன் விஜயகாந்த். அவர் இறப்பிற்கு கூட வந்து அஞ்சலி செலுத்த முடியாத மனுஷன் என்ன மனுஷன் என்று இப்பொழுது வரை அஜித்தை வசை பாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கார் கிளீனர் முதல் நடிகர் வரை!.. தூக்கிவிட்ட சூப்பர்ஸ்டார்!.. ராகவா லாரன்ஸ் உருவான கதை!..

ஆனால் அஜித்தை பொறுத்தவரைக்கும் அவர் என்ன நினைக்கிறாரோ அதை செய்யக் கூடியவர். மற்றவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்காக செய்ய வேண்டும் என்ற எண்ணமே அஜித்திடம் கிடையாது என ஒரு பிரபல பத்திரிக்கையாளர் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் அஜித் ஒரு வேற்றுகிரகவாசியாகவே மாறிவிட்டார் என்றும் இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றியே அஜித்துக்கு தெரியாது என்றும் பல கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: அட அந்த மாஸ் ஹிட் படத்தின் மூன்றாம் பாகமா? கவினை களமிறக்க திட்டம் தீட்டும் இயக்குனர்… வேற லெவல்…

ஆனால் அது எதற்குமே அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. எந்த ஒரு ரியாக்‌ஷனும் இல்லை. ஆனால் நடிகை ஷாலினி அவருடைய இணையதள பக்கத்தில் அஜித்தின் லேட்டஸ்டான புகைப்படத்தை போட்டு ‘வாழு வாழவிடு’ என்ற கேப்டசனுடன் பதிவிட்டிருக்கிறார். இதற்கு அர்த்தம் என அனைவருக்குமே தெரிந்திருக்கும்,

இந்த கேப்சனையே ஹேஸ் டேக்காக வைத்து ரசிகர்கள் X தள பக்கத்தில் டிரெண்டிங்காக்கி வருகிறார்கள். ஏராளமான பார்வையாளர்கள் அதை டேக் செய்திருக்கின்றனர். அவர் மீது கல்லே எறிந்தாலும் இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கிறவரைக்கும் தலக்கு எந்த ஆபத்தும் வராது என்று கமெண்ட்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: எங்கள காப்பாத்திக்க ஒரே வழி.. இப்படி இறங்கிட்டாங்களே? வீடியோவை போட்டு ஷாக் கொடுத்த நயன்

Next Story