போன வருஷம் மாதிரி., இந்த வருஷமும் ஏமாத்திராதீங்க.! கலக்கத்துடன் அஜித் ரசிகர்கள்.!

by Manikandan |   ( Updated:2022-04-13 04:17:08  )
போன வருஷம் மாதிரி., இந்த வருஷமும் ஏமாத்திராதீங்க.! கலக்கத்துடன் அஜித் ரசிகர்கள்.!
X

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பது என்னவென்றால், தனது தங்களது ஆஸ்தான நடிகரின் பிறந்தநாளன்று ஏதேனும் ஒரு அப்டேட் வர வேண்டும் அல்லது அடுத்தடுத்த திரைப்படங்களை பற்றிய தகவல்கள் அன்றைய நாள் வெளிவர வேணும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். அப்படித்தான் அஜித் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடந்த முறை அவ்வாறு நடைபெறவில்லை.

வலிமை படத்தின் ஏதேனும் ஒரு அப்டேட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடந்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி ஏமாற்றமே மிஞ்சியது. கொரோனா காலகட்டத்தில் இந்த மாதிரியான அப்டேட் வேண்டாமென்று அஜித் மறுத்துவிட்டதாக அன்று தகவல்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் கடந்த வருடம் மிகவும் அப்செட்டில் இருந்தனர். தங்களது ஆஸ்தான நடிகர் பற்றிய அப்டேட் எதுவும் வெளிவரவில்லை என வருத்தத்துடன் இருந்தனர்.

ஆனால், இந்த வருடம் அந்த மாதிரியான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. அதனால் இந்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி அஜீத் நடிக்கும் 61வது திரைப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் - தயவு செஞ்சி அந்த முடிவு மட்டும் எடுக்காதீங்க…..சிம்புவிடம் கதறும் ரசிகர்கள்.!

அதற்கேற்றார்போல தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருடம் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று அஜித் நடிக்கும் 61வது படத்தின் முதல் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வினோத் இயக்கி வருகிறார். வங்கி கொள்ளை அது பற்றிய படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story